IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

வணிகர்களுக்கான புதிய முயற்சியில் பேஸ்புக் நிறுவனம்

0 82

உலகளவில் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான பேஸ்புக் நிறுவனத்தினை வியாபார நிறுவனங்கள் தங்கள் விளம்பரத்திற்காக பயன்படுத்தி வருகின்றன. இது தொடர்பாக புதிய தகவல் ஒன்றினை பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதன்படி மாதந்தோறும் சுமார் 140 மில்லியன் வரையான விளம்பரங்கள் தொடர்பில் பேஸ்புக் வலைதளம் மற்றும் அதன் அப்ளிக்கேஷன்களை உலகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.

வாடிக்கையாளர்களை நெருங்குவதற்கு மிகவும் பொருத்தமான இடமாக பேஸ்புக் நிறுவனம் திகழ்வதால் அதிகளவு எண்ணிக்கையில் வியாபார நிறுவனங்கள் விளம்பரங்களை மேற்கொண்டு வருகின்றன.

இதுகுறித்து விளம்பரதாரர்களை மேலும் ஈர்க்கும் பொருட்டு உலக அளவில் 17 பெரிய அலுவலகங்களை திறப்பதற்கு பேஸ்புக் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.