IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

சென்செக்ஸ் 41% உயர்வு

Get real time updates directly on you device, subscribe now.

பாஜக தலைமையிலான அரசு பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் சென்செக்ஸ் 41 சதவீதம் உயர்ந்திருக்கிறது.

2014-ம் ஆண்டு புதிய அரசு பதவியேற்றதில் இருந்து 10207 புள்ளிகள் உயர்ந்திருக்கிறது. அதிகபட்சமாக கடந்த ஜனவரி 29-ம் தேதி 36443 புள்ளியைத் தொட்டது. பிஎஸ்இ பட்டியலில் உள்ள நிறுவனங்களின் சந்தை மதிப்பு கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.75 லட்சம் கோடி உயர்ந்து ரூ.147 லட்சம் கோடியாக இருக்கிறது.

கடந்த நான்கு ஆண்டுகளில் 40 சதவீதம் அளவுக்கு மட்டுமே வளர்ச்சி அடைந்திருக்கிறது. கடந்த ஆண்டுகளில் நிறுவனங்களின் விற்பனை மந்தமாக இருந்ததே இந்த செயல்பாட்டுக்கு காரணம். இருந்தாலும் நடப்பு நிதி ஆண்டில் வருமானம் உயரும் என நம்புவதாக ஜியோஜித் பைனான்ஸியல் சர்வீசஸ் தலைமை முதலீட்டு அதிகாரி வி.கே.விஜய்குமார் தெரிவித்தார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader