IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பொருளாதார நெருக்கடி – 92 ஆயிரம் பிஎஸ்என்எல் ஊழியர்கள் விருப்ப ஓய்வு

92

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களை மறுசீரமைப்பதற்காக ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிக்க கடந்த 3ம் தேதி கடைசி நாள் ஆகும்.
இந்நிலையில் விருப்ப ஓய்வுக்கு 92 ஆயிரம் ஊழியர்கள் விண்ணப்பித்து இருப்பதாக மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

இந்த இரு நிறுவனங்களையும் மத்திய அரசு இணைக்கும். இதனால் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை அளிக்க முடியும். இந்த நிறுவனங்களுக்கு 4ஜி சேவை அளிக்கப்படும். இந்த இரண்டையும் லாபகரமாக இயக்க உறுதி அளிக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.