12.1 C
Munich
Monday, October 3, 2022

பிஎஸ்ஹெச்-ன் இலவச பழுது நீக்கும் சேவை முகாம்

Must read

ஐரோப்பாவின் மிகப் பெரிய வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிப்பு நிறுவனம் மற்றும் உலகின் மிகப் பெரிய முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான பிஎஸ்ஹெச் ஹோம் அப்ளையன்சஸ், இந்தியாவின் 115 நகரங்களில், 2022 செப்டம்பர் 12 முதல் 17 வரை இலவச பழுது நீக்கும் சேவை முகாமை நடத்த உள்ளது. இலவச பழுது நீக்கும் சேவை முகாம் தமிழகம், ராஜஸ்தான், மராட்டியம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், குஜராத், கருநாடகம் உள்ளிட்ட முக்கிய மாநிலங்களில் நடைபெறும்.  

இந்த முகாமின் போது வாடிக்கையாளர்கள் நீட்டிக்கப்பட்ட வாரண்டியில் 20 சதவிகித கழிவு, உதிரி பாகங்கள், துணைக் கருவிகள், நுகர்வுகள் ஆகியவற்றில் 10 சதவிகித  கழிவு, வருகை மற்றும் பழுது நீக்கும் கட்டணங்கள் முழுமையான தள்ளுபடி உள்ளிட்ட பலன்களைப் பெறுவர். பிஎஸ்ஹெச் வாடிக்கையாளர் சேவையில் டீஸ்கேலர்கள், டிடர்ஜெண்ட்கள், டிஷ்வாஷர் டேப்ளெட்கள், டஸ்ட் கவர்கள், பெடஸ்டெல்கள் உள்ளிட்ட பல்வகை நுகர்வுகள் மற்றும் துணைக் கருவிகள் அடங்கும்.

முந்தைய முகாம்களுக்குக் கிடைத்த அபரிமித வரவேற்பு காரணமாக நுகர்வோர் எதிர்காலத்திலும் இதுபோன்ற பழுது நீக்கும் சேவை முகாம்களில் பங்கேற்க ஆவலுடன் காத்திருப்பதாகக் கூறினர். கட்டாயத் தேவை என்பதால், நுகர்வோர் இலவச பழுது நீக்கும் சேவை முகாமில் பங்கேற்றுப் பலன்களைப் பெற முன்-பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும். 1800-266-1880 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் அல்லது  [email protected] <mailto:[email protected]com> முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் என பிஎஸ்ஹெச் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article