IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

அண்ணனின் கள்ளக்காதல் தங்கையின் உயிரை எடுத்தது!

Get real time updates directly on you device, subscribe now.

அண்ணனின் கள்ளக்காதலால் தங்கையை ஒரு கும்பல் கொலை செய்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவுசெய்து அந்த கும்பலை தேடி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 52). இவருடைய மனைவி கலாவதி (வயது 50). இவர்களுக்கு அருண் (வயது 27) என்ற மகனும், அனிதா (வயது 24) என்ற மகளும் உள்ளனர்.


விஷ ஊசி போட்டு நர்ஸ் தற்கொலை; இதன் பின்னணி என்ன?

அனிதாவுக்கும் நாமக்கல் மேட்டுதெருவைச் சேர்ந்த விமல்ராஜ் (வயது 25) என்பவருக்கு ஓராண்டுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஐந்து மாத பெண் குழந்தை உள்ளது. விமல்ராஜ் பஸ் நிலையத்தில் அருகே உள்ள பழக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் மனைவி வீட்டிலேயே தங்கி இருந்தார்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இரவு 10 மணி அளவில் கருப்பசாமி வீட்டிற்கு 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வந்துள்ளது. அவர்கள் அருணை பற்றி விசாரித்துள்ளனர். ஆனால் அருண் வீட்டில் இல்லை. இதையடுத்து கருப்பசாமி, அனிதா மற்றும் விமல்ராஜை அவர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.

இதில் சம்பவ இடத்திலேயே விமல்ராஜூம், அனிதாவும் பரிதாபமாக உயிரிழந்தனர். கடைக்கு சென்று வந்த கலாவதி , இவர்கள் மூவரையும் பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். இவருடைய அழுகை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பிறகு கருப்பசாமியை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்ததில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

நாமக்கல் பொய்யோரிக்கரையைச் சேர்ந்தவர் நிக்கல்சன். இவர் மீது பல வழக்குகள் உள்ளது. இவருடைய மனைவி சோபனா. சோபனாவுக்கும் அருணுக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. அதனை பல முறை நிக்கல்சன் கண்டித்துள்ளார். ஆனால் இருவரும் கேட்கவில்லை.

சோபனாவை திடீரென காணவில்லை. இது குறித்து நிக்கல்சன் அருணிடம் கேட்ட போது, அவர் சரியாக பதிலளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நிக்கல்சன் அருணை தீர்த்துக்கட்ட வேண்டும் என்ற முடிவில் அருணுடைய வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால் அருண் வீட்டில் இல்லை. அதனால் அருணுடைய தந்தை, தங்கை மற்றும் மைத்துனரை கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இந்நிலையில் கோவை நீதிமன்றத்தில் நேற்று நிக்கல்சன் சரணடைந்தார். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


#murder #brother #sister #affair

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader