IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

நள்ளிரவில் நடுரோட்டில் வீசப்பட்ட ஆண் சிசு! நாய்களிடம் இருந்து தப்பிய அதிசயம்!!

12

நள்ளிரவில் நடுரோட்டில் வீசப்பட்ட ஆண் குழந்தையை அந்த வழியாகச் சென்ற பெண்கள் மீட்டு போலீசில் ஒப்படைத்தனர். குழந்தை தவறான வழியில் பிறந்திருக்கலாம் என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.



மதுரை ஜெய்ஹிந்த்புரம் அருகே உள்ள தெருவில் அதிகாலையில் பெண்கள் தண்ணீர் பிடிக்கச் சென்றனர். அந்த தெருவில் தண்ணீர் குழாய்க்கு அருகில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. அந்த சத்ததை கேட்டு ராஜேஸ்வரி என்ற பெண் அருகில் சென்று பார்த்தபோது, அழகான ஆண் குழந்தை கிடந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி குழந்தையை தூக்கினார். அந்த குழந்தை யாருடையது என்று எல்லாரிடமும் கேட்டார். ஆனால் குழந்தை யாருடையது என்று தெரியவில்லை.

அதிகாலை நேரம் ஆளில்லா சாலை கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த இன்ஸ்பெக்டர்

நள்ளிரவில் அந்த குழந்தை நடு ரோட்டில் வீசப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. அதிர்ஷ்டவசமாக தெரு நாய்களிடம் குழந்தை சிக்காமல் உயிர் பிழைத்திருந்தது. தெருநாய்களிடம் சிக்கியிருந்தால் குழந்தையின் நிலைமை என்ன ஆயிருக்குமோ? என்று பெண்கள் பதறினார்கள்.


இதையடுத்து குழந்தை குறித்து பெண்கள் அனைவரும் ஜெய்ஹிந்த் புரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். பின்னர் குழந்தையை மதுரை அரசு மருத்துவமனை அனுப்பினர். டாக்டர்கள் குழந்தையை பரிசோதனை செய்தனர். பரிசோதனையில் குழந்தை பிறந்து சில மணி நேரத்திலேயே தூக்கி வீசப்பட்டது என தெரிய வந்தது.


பின்னர் குழந்தையை சிசு நல பிரிவில் அனுமதித்து சிகிச்சை கொடுத்து வருகின்றனர். மேலும் போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். குழந்தை யாருடையது? எதற்காக குழந்தை வீசப்பட்டது? குழந்தை தவறான வழியில் பிறந்ததா? என பல கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

#bronbaby #street #madurai