IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கத்திரிக்காய் சாகுபடி

Get real time updates directly on you device, subscribe now.

கத்திரிக்காய் வறட்சியை நன்கு தாங்கி வளரக்கூடியது. சுமார் 100 கிராம் எடை கொண்ட கத்தரிக்காயில் புரதச்சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின்-சி போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன.

கத்திரிக்காய் வகைகள் :

கத்திரிக்காயில் பல ரகங்கள் உள்ளன. கோ.1, கோ.2, எம்டியு 1, பிகேஎம் 1, பிஎல்ஆர் 1, கேகேஎம் 1, அண்ணாமலை, கோபிஎச் 1 (வீரிய ஒட்டு இரகம்) அர்கா நவனீத், அர்கா கேசவ், அர்கா நிரி, அர்கா சிரீஸ் மற்றும் அர்கா ஆனந்த்.

பயிரிடும் காலம் :
கத்திரிகாய் டிசம்பர், ஜனவரி மாதத்தில் தொடங்கி மே வரை பயரிடலாம்.

மண்ணின் தன்மை :

நல்ல வடிகால் வசதியுள்ள மணல் கலந்த வண்டல் மண் அல்லது களிமண் கலந்த வண்டல் மண் கத்திரி பயிரிட ஏற்றதாகும்.

விதை நேர்த்தி:

ஒரு ஹெக்டேருக்கு 200 கிராம் வீதம் விதை நேர்த்தி செய்ய வேண்டும். டிரைகோடெர்மா விரிடி 4 கிராம் அல்லது சூடோமோனாஸ் புளோரசன்ஸ் 10 கிராம் வீதம் கலக்க வேண்டும். அசோஸ்பைரில்லம், பாஸ்போபேக்டீரியா ஒவ்வொன்றையும் 100 கிராம் வீதம் கலந்து நிழலில் அரைமணி நேரம் வைக்க வேண்டும்.

இவ்வாறு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை, உயரமான பாத்திகளில் 10 செ.மீ இடைவெளியில் அரை அங்குல ஆழத்திற்கு கோடுகள் போட்டு அதில் விதைகளைப் பரவலாகத் தூவவேண்டும். விதைத்த பின்பு மணல் போட்டு மூடி உடனே நீர் பாய்ச்சவேண்டும்.

இடைவெளி:

பொதுவாக கத்திரி ரகத்தின் தன்மையைப் பொறுத்து இடைவெளி, செடியின் எண்ணிக்கை மாறுபடும். மிதமான வளர்ச்சி உள்ள ரகங்களை 4 அடி அகலமுள்ள மேட்டுப் பாத்தியில் ரெட்டை வரிசை முறையில் 60 x 60 சென்டி மீட்டர் இடைவெளியில் நட வேண்டும். அதிக வளர்ச்சியுள்ள ரகங்களை உயர் பாத்தியில் ஒரு வரிசையில் ஒரு செடிக்கும் மற்றொரு செடிக்கும் 45 சென்டி மீட்டர் இடைவெளியில் நட வேண்டும்.

#brinjal #Cultivation

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader