முகக்கவசம் அணிய மறுத்த பிரேசில் அதிபர்! கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதி

Get real time updates directly on you device, subscribe now.

கொரோனாவை பற்றி கவலைபடாமல் முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றி வந்து மக்கள் சுதந்திரமாக வெளியே நடமாட வேண்டும் என பிரச்சாரம் செய்த பிரேசில் அதிபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் முழு செயல்பாட்டையும் முடக்கியுள்ளது. கொரோனாவினால் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.

தென் கொரியா, நியூசிலாந்து, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் படிப்படியாக கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளன. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகளின் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

வீட்டை விட்டு வெளியே வரும்போது பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு உலக நாடுகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறது.

சர்வதேச அளவிலான கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும் பிரேசில் 2-வது இடத்திலும் உள்ளன. 3 வது இடத்தில் இந்தியாவும், நான்காவது இடத்தில் ரஷ்யாவும் உள்ளன. பிரேசிலில் 16,23,284 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 620 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 65,487 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் அந்நாட்டு அதிபர் போல்சோனாரோவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தனது வழக்கமான அலுவலக பணிகளை மேற்கொள்ள அலுவலகம் வராமல் தவிர்த்தார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜேர் போல்சோனாரோ. கொரோனா வைரஸால் உலகமே அச்சத்தில் இருக்கும் போது, மக்கள் சமூக விலகல், முக்கவசம் அணியத் தேவையில்லை சுதந்திரமாக நடமாடுங்கள் என்று பிரச்சாரம் செய்தவர்.

மக்கள் லாக்டவுனில் வீட்டுக்குள் முடங்கி இருந்தால், கொரோனா ஏற்படுத்தும் பாதிப்பைவிட மோசமான பாதிப்பு பொருளாதார முடக்கத்தால் ஏற்படும். மக்கள் வெளியே வந்து சுதந்திரமாக பொருளாதார நடவடிக்கையில் ஈடுபடுங்கள் என தொடர்ந்து போல்சனாரோ பேசி வந்தார்.

மேலும் போல்சனாரோவும் வெளியே சென்றால் முகக்கவசத்தை அணிவதில்லை. தலைநகர் பிரேசிலியாவை விட்டு அதிபர் போல்சோனாரோ எங்கு சென்றாலும் அவர் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும், உத்தரவை அவர் மதிக்காவிட்டால் அவர் நாள்தோறும் 390 டாலர் அபராதம் செலுத்த வேண்டும் என்று பிரேசில் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader