IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

லேடி கெட்டப்பில் சிறை அதிகாரிகளுக்கு அல்வா கொடுக்க முயன்ற பலே திருடன்

6


பிரேசில் நாட்டில் பெண் வேடமிட்டு சிறை அதிகாரிகளிடமிருந்து தப்ப முயன்ற பலே திருடன் மாட்டியுள்ளார். அவர் பெண் வேடத்திலிருப்பதை கலைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.


பிரேசில் நாட்டை சேர்ந்த கிளாவினா டா சில்வர் என்பவர் சட்ட விரோதமாக போதைப் பொருள் கடத்தலை செய்து வருபவர். இவர் கிராம மக்களை மிரட்டியும், மூளைச்சலவை செய்தும் போதைப் பொருளை விற்பனை செய்து வருகிறார். இவரை பிடிக்க போலீசார் வலைவீசி தேடினர். இறுதியாக போலீசாரிடம் மாட்டிக் கொண்டு சிறையில் அடைபட்டனர்.


ஆனால் சிறையில் அடைபட்ட கிளாவினாவிற்கோ எப்படியாவது சிறையிலிருந்து தப்பிக்க யோசனை செய்தார். அதற்கு வாரந்தோறும் தன்னை பார்க்க வரும் மகளை வைத்து ஒரு திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி தன் மகள்போலவே வேடமிட்டு, மகள் வரும் நாள் அன்று தான் வெளியே சென்று விடலாம் என்று முடிவு செய்தார்.


உடனே தன் மகள் முகம் போலவே, தலைமுடி, உடை, முகமூடி ஆகியவைகளை சிறைக்குள்ளே தன்செல்வாக்கை பயன்படுத்தி உள்ளே வரவழைத்துள்ளார். தன்மகள் வந்த நாளன்று, மகள் போலவே வேடமிட்டு சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார்.


ஆனால் அவரது நடை மற்றும் முகத்தில் தெரிந்த மாற்றத்தால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து விசாரித்ததில் கிளாவினோ தான் தனது மகள்போல முகமூடி அணிந்து தப்பிக்க முயன்றது சிறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து மீண்டும் கிளாவினோவை சிறையில் பிடித்து அடைத்தனர்.


பிடிபட்ட கிளாவினோ தனது மகள் போல முகமூடி அணிந்ததை கலைக்கும் வீடியோ வெளியாகி தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.