IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

மேசை மீது கால் வைத்து பிரதமர் அவமதிப்பா ?

24


அதிபர் இம்மானுவேல் மேக்ரோனை சந்தித்துப் பேசிய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இருவரும் பேசிக் கொண்டிருந்த போது நடுவில் இருந்த மேசை மீது மரியாதை இல்லாமல் காலை தூக்கி வைத்த சம்பவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


ஐரோப்பா யூனியனிலிருந்து இங்கிலாந்து வெளியேறும் பிரெக்சிட் மாநாடு காரணமாக இங்கிலாந்து பிரதமர் ஜான்சன் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேன்ரோனை சந்தித்து பேசினர். அதிபர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது இம்மானுவேல் மோக்ரோனிடம் ஜோக் ஒன்றை சொல்லிக் கொண்டு சிரித்த போது, போரிஸ் ஜான்சன் அங்கிருந்த மேசை மீது கால் வைத்தபடி சிரித்தார்.


இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் அதிபரை அவமதிக்கும் வகையில் இங்கிலாந்து பிரதமர் நடந்துகொண்டதாக சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.