IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

மகாத்மா காந்தியின் பிறந்தநாளை கொண்டாட பாலிவுட் நடசத்திரங்களுடன் கைகோர்த்த பிரதமர் மோடி

0 35

மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் ஆண்டை ஒட்டி பாலிவுட் நட்சத்திரங்களான ஷாரூக்கான், அமீர்கான், ராகுல் ப்ரீத்தி சிங் மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்ட திரைநட்சத்திரங்கள் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடியுள்ளனர்.

தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிற்நத நாள் கடந்த அக்டோபர் 2ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. மேலும் மத்திய அரசு சார்பில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட முடிவு செய்யப்பட்டது. இதன்படி காந்தியடிகளின் கொள்கைகளையும், அவரது போதனைகளையும் நாடுமுழுவதும் அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்க பிரதமர் மோடியுடன் பாலிவுட் திரைநட்சத்திரங்கள் ஆலோசனை செய்தனர்.

டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர்கள் ஷாரூக்கான், ஆமீர்கான், ரன்பீர் கபூர், சோனம் கபூர், கங்கணா ரணாவத், விக்கி கவுசல், இயக்குநர் ராஜ்குமார் ஹிராணி உள்ளிட்ட திரைநட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பில் முக்கிய பகுதியாக “நமக்குள் மாற்றம்” என்ற தலைப்பில் காந்தியடிகளின் வாழ்க்கையை விளக்கும் வகையில் 100 நொடிகள் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை பிரதமர் மோடி வெளியிட்டார்.

இதுதொடர்பாக நடிகர் ஷாரூக்கான் கூறுகையில், இந்தியாவிற்கும் உலகுக்கும் காந்தியடிகளை மறு அறிமுகம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். எனவே இன்றைய இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க சினிமாவை கையில் எடுக்க வேண்டும். இதுகுறித்து பிரதமர் மோடியுடன் சேர்ந்து ஆலோசனை நடத்தினோம் என்றார்.

இந்தியாவிற்கு விடுதலை வாங்கிக் கொடுத்த நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியின் கொள்ளைகளை இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்வதற்குக் கூட திரைநட்சத்திரங்கள் உதவியால் தான் நடைபெறும் என்கிற அளவிற்கு உலகம் கெட்டுப்போய் இருக்கிறது என சமூக ஆர்வலர்கள் தங்களது வேதனைகளை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
NarendraModi #ChangeWithin #In4Net