Home கட்டுரை ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் உருமாறும் அதிசிய உயிரினம் ப்ளூ ஏஞ்சல்

ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் உருமாறும் அதிசிய உயிரினம் ப்ளூ ஏஞ்சல்

0

பார்ப்பதற்கு அழகான கற்பனை ஓவியம் போன்று தோற்றமளிக்கும் இந்த உயிரினத்தின் பெயர் ப்ளூ கிளாக்கஸ் ( Blue Glaucus).

பார்ப்பதற்கு செடியின் காம்பில் நீல நிற பூக்கள் பூத்தது போன்று இந்த மீன்களின் அமைப்பு அழகாக அமைந்திருக்கும்.

அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடலின் அடியில் ஆழமான பகுதிகளில் இந்த உயிரினம் வாழ்கின்றன.

இது பார்ப்பதற்கு மீன் மாதிரி இருந்தாலும் இவை கடல் நத்தை வகையினத்தை சேர்ந்தது. இதற்கு மற்றொரு பெயர் உண்டு அது ப்ளூ டிராகன்.

இதன் மொத்த அளவு வெறும் 1.5 இன்ச் மட்டுமே. மீன் மாதிரி நீரில் நீந்தாமல் தண்ணீரில் மிதந்து கொண்டே இருக்கும். தொடர்ந்து நீரில் மிதப்பதனால் வாயினுள் காற்று குமிழ்களை வைத்துக் கொண்டே இருக்கும். சிறிது நேரம் மட்டுமே நீந்தவும் செய்யும்.

பார்ப்பதற்கு சிறிதாக இருந்தாலும் சாப்பிடும் உணவுப் பொருட்கள் எல்லாமே பெரிதாகத்தான் இருக்கும்.

தன்னை விட பெரிய பெரிய மீன்களை கூட வேட்டையாடி கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடும். இதன் வாயில் கத்தி போன்ற கூர்மையான பற்கள் இருக்கும். இதனைப் பயன்படுத்தி தான் வேட்டையாடும்.

தன்னை யாரெனும் தாக்க வருவதை முன்கூட்டியே கணித்துவிடும் திறமை இதற்கு உண்டு. உடனே தலைகீழாக கடற்படுக்கையில் படுத்துவிடும்.

அதனை பார்க்கும் போது சாம்பல் நிறத்தில் மணல் போன்று தோற்றமளிப்பதால் எதிரிகளிடமிருந்து எளிதாக தப்பித்து விடும்.

எதிரிகளிடமிருந்து தப்பிக்கவே முடியாத சூழ்நிலை வரும்போது விஷ இரசாயனத்தை வெளியேற்றி தனது உடல் முழுவதும் பூசிக் கொள்ளும்.

அந்த வாசனை தாங்க முடியாமல் எதிரிகள் தப்பித்து ஓடிவிடும். அதையும் மீறி ப்ளூ ஏஞ்சலை தாக்கினால் அந்த உயிரினம் இறந்துவிடும்.

ப்ளூ ஏஞ்சலின் உடம்பிலிருந்து வரும் விஷ வாயுவின் நாற்றம் 30 அடி தூரம் வரை வீசும்.

ஒரு முறை தனது உடம்பிலிருந்து விஷத்தை கக்கினால் மீண்டும் அதன் உடம்பில் உள்ள செல்கள் மீண்டும் விஷத்தை உற்பத்தி செய்து கொள்ளும். அதுமட்டுமின்றி எதிரிகளின் அளவினை பொறுத்து அந்த வாசனையின் அளவும் மாறும்.

ஆண் பெண் ப்ளூ ஏஞ்சல் மீன்கள் தன்னோட இனப்பெருக்கத்தின் போது தன்னோட விந்தணுக்களையும் கரு முட்டைகளையும் தண்ணீரில் வெளியேற்றும்.

அது தானாகவே தண்ணீர் மேலே ஒட்டிக் கொண்டு தானாகவே குஞ்சுகள் பொறித்துக் கொள்ளும்.

இந்த மீன்கள் கூட்டமாக ஒன்றாகத் தான் சுற்றித் திரியும்.

அந்த நேரத்தில் பெரிய மீன்களினாலோ அல்லது வேறு உயிரினங்களினால் ஏதேனும் ஆபத்து நேரினால் இந்த ப்ளூ ஏஞ்சல்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து கொடுக்கு மாதிரியான ஒரு உறுப்பினால் அந்த எதிரிகளை குத்தும்.

அது பார்ப்பதற்கு குட்டியாக இருந்தாலும் கூட்டமாக சேர்ந்து குத்தும் வலி தாங்க முடியாமல் எதிரிகள் தப்பித்து ஓடிவிடும்.

இந்த மீனோட சிறப்பம்சம் என்னவென்றால் இவற்றிற்கு ஆணுறுப்பும் உண்டு. பெண்ணுறுப்பும் உண்டு.

இனப்பெருக்க காலத்தில் இரண்டு மீன்களும் எதிரெதிரே நின்று ஆண் மீன் பெண்ணாகவும் பெண் மீன் வந்தால் ஆணாகவும் மாறிக் கொள்ளும். இரண்டுமே பெண் மீனாக வந்தாலும் அதில் ஒன்று ஆண் மீனாக மாறிவிடும்.

இந்த வகை மீன்கள் அளவில் சிறியதாக இருப்பதனாலேயும் கடலில் அதிகம் கிடைக்காதனாலேயும் மீனவர்கள் ப்ளூ ஏஞ்சல் மீன்களை பிடிப்பதில்லை.

அதையும் மீறி பிடித்தால் கொடுக்கினால் கொத்திவிடும். அல்லது விஷ வாயுவை வெளியேற்றி தற்காத்துக் கொள்ளும்.

இருப்பினும் சில ஆராய்ச்சியாளர்கள் இதனைப் பிடித்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

பார்க்க குட்டியாக அழகாக இருக்கும் இந்த வகை மீன்களை வீட்டில் தொட்டியில் வளர்க்க முடியாது. அது வெளியேற்றும் நாற்றம் வீட்டையே நாசமாக்கிவிடும். அதுமட்டுமின்றி அது சாப்பிடும் அளவிற்கு உணவளிக்க முடியாது.

Exit mobile version