IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

புகைப்படம் என்றால் பூனை மட்டும் என்ன சும்மாவா..?

0 81

வீட்டில் வளர்க்கும் வளர்ப்பு பூனை ஓன்று புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து சிரிக்கும் காட்சி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நம்மில் பலரும் செல்லப்பிராணிகள் மீது அதீத பாசமும், அக்கறையுடன் அவற்றை வளர்ப்பது உண்டு. அவற்றை வளர்க்கும் போது அழகாகவும், புத்திசாலியாகவும் வளர்க்க பல்வேறு முயற்சிகளை நாம் மேற்கொள்வது வழக்கம்.

நம் வீட்டில் செல்லப் பிராணிகள் செய்யும் சேட்டைகளை வீடியோவாக எடுத்து அவற்றை சமூக வலைதளங்களில் அப்லோட் செய்யும் பழக்கும் பலருக்கும் உண்டு. இந்நிலையில் வீட்டில் வளர்க்கும் வளர்ப்பு பூனை ஒன்று புகைப்படத்திற்காக போஸ் கொடுத்து சிரிக்கும் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்தப்படம் இணைய பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. லாரன் பௌட்ஸ் தனது மூன்று புதிய வளர்ப்பு பூனைகளின் படங்களை ப்ளாசம், ஸ்மைலி மற்றும் பட்டர்கப் ஆகியவற்றை பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.