IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

பிகில் பிரச்சனையை தீர்த்து வைப்பாரா முதல்வர் எடப்பாடியார்….?

Get real time updates directly on you device, subscribe now.

சில தினங்களுக்கு முன் பிகில் படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தீபாவளி ரிலீசிற்கு தயாரான பிகில் மீண்டும் சில பிரச்சனைகளால் ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் என்று நினைத்து படத்தை ரிலீஸ் செய்ய தமிழக முதல்வரை படத்தயாரிப்பாளர் மற்றும் நடிகர் விஜய் சந்திக்க முடிவெடுத்துள்ளனர்.

பிகில் நாயகன் விஜய் மற்றும் தயாரிப்பாளர்கள் கல்பாத்தி அகோரம் மற்றும் படக்குழுவினர்கள் படத்தை சென்சார் போர்டிற்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அதிகாரிகளோ படத்தை பார்க்க தயக்கம் காட்டி வந்தனர். பின்பு கடந்த 9ம் தேதி சென்சாருக்கு அனுப்பப்பட்ட பிகில் படத்தை பார்க்க போர்டு மெம்பர்கள் தயக்கம் காட்டினர்.

எதற்காக படத்தை பார்க்காமல் இழுத்தடிக்கின்றனர் என்பதை அறியாத படக்குழுவினர்கள் இறுதியில் நேற்று மாலை படத்தை பார்த்த அதிகாரிகள் கட் எதுவும் செய்யாமல் படத்திற்கு யு/ஏ சர்டிபிகேட் கொடுத்து இப்போதைக்கு விளம்பரம் செய்யாதீர்கள் என்று எச்சரித்ததாக தெரியவருகிறது. படம் 2 மணிநேரம் 55 நிமிடங்கள் ஓடுகிறதாம்.
தீபாவளிக்கு பிகில் ரிலீஸ் கன்ஃபார்ம் – அரசியல்வாதிகள் கப்சிப்!!

படம் ரிலீசாகுவதற்கு பிரச்சனை என்னவென்றால் பழைய திருட்டு கதை வழக்கு ஒன்று தூசி தட்டப்பட்டிருப்பது குறித்து படம் தீபாவளி தினத்தன்று ரிலீசாகுமா என்கிற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. அந்த பழைய படத்தின் கதை காப்புரிமை பெற்றது என்பதால் உயர்நீதிமன்றத்தை நாடுமாறு உரிமையியல் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதால் கே.பி.செல்வா, தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

அப்போது அட்லீ மற்றும் படத்தயாரிப்பு நிறுவனம் உரிமையியல் நீதிமன்றத்தில் சமர்பித்த ஆவணங்களை உயர்நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று கூறி வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 25 ஆம் தேதி பட நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்..

இயக்குநர் அட்லியின் சார்பில் கடுமையான வாதங்கள் எடுத்து வைக்கப்பட்ட நிலையில், தோல்வியை உணர்ந்த கே.பி.செல்வா, வழக்கைத் திரும்ப பெறுவதற்கு அனுமதி கோரியும், புதிதாக ஒரு வழக்கு தொடுக்க உரிமை கேட்டும், விண்ணப்பம் ஒன்றை தாக்கல் செய்தார். வழக்கைத் திரும்பப் பெற அனுமதி தந்த நீதிமன்றம் இதே காரணத்தின் பேரில் புதிய வழக்குத் தொடுக்க உரிமை வழங்க மறுத்து விட்டது. முடிவில், வழக்கை வாபஸ் பெற்றதன் பேரில், தள்ளுபடி ஆனது.
அரசியல் பேசாத பிகில் டிரைலர் – பின்வாங்கி விட்டாரா விஜய் ?

தற்போது வெளியாகும் அனைத்து படங்களுமே கதை திருட்டு போன்ற குற்றச்சாட்டுகளில் வெளியாகிறது. இக்காலத்தில் வெளியாகும் பெரிய படங்கள் மற்றும் முன்னணி திரை நட்சத்திரங்களின் படங்கள் அனைத்துமே படம் வெளியாகுவதற்கு இதுபோன்ற ஏதேனும் பிரச்சனைகளால் படத்திற்கான விளம்பரத்தை தேடுவது போன்று அமைந்து விடுகிறது என உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது.

பட நிறுவனம் அப்போது சொன்ன செய்திக்கு மாறாக இப்போது வழக்கு நடந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலிடம் விஜய் தொடர்பாக ஒரு முடிவுக்கு வரும்வரை இதுபோன்ற சம்பவங்கள் தொடரும் என்றே தெரிகிறது. இதனால் நாளை மாலைக்குள் முதல்வர் எடப்பாடியை விஜய் சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய பட தயாரிப்பு நிறுவனம் ஏற்பாடு செய்து வருகிறது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader