IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

எடப்பாடி தான் எங்களுக்கு அப்பா – பிகிலுக்காக கையேந்தும் எஸ்.ஏ.சந்திர சேகர்

0 63

அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா, யோகிபாபு ஆகியோர் நடிப்பில் வெளியாகவுள்ள பிகில் திரைப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் வருகின்ற தீபாவளி அக்டோபர் 27 ஞாயிற்றுக்கிழமை வருவதால் அடுத்த இருதினங்கள் விடுமுறை இல்லை என்பதால் முன்கூட்டியே அக்டோபர் 25 வெள்ளிக்கிழமை ரிலீஸ் என தேதி அறிவிக்கப்பட்டது.

180 கோடி பொருட்செலவில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள பிகில் திரைப்படம் ரிலீஸிற்கு முன்னரே 220 கோடி ரூபாய்க்கு வர்த்தகமாகி உள்ள போதும் படத்தின் விநியோகஸ்தர்கள் லாபம் பெற படத்தின் மொத்த வசூல் 250 கோடியை தாண்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எனவே படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் சிறப்பு காட்சிகள் வைத்து அதிக லாபம் பெற முடிவு செய்துள்ளனர்.

அதற்கேற்ப தமிழகத்தில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் 25-ம் தேதி அதிகாலை ஒரு மணியிலிருந்து சிறப்பு காட்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கிடையாது என அறிவித்துவிட்டார். அக்டோபர் 25ம் தேதி காலை 10 மணியளவில் தான் காட்சிகள் வெளியிடப்படும் என தெரிவித்தார். இந்த அறிவிப்பு தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு பெரும் இடியாக அமைந்தது.

ஏற்கனவே படத்திற்காக அதிகவிலை கொடுத்து டிக்கெட் வாங்கிய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. இந்நிலையில் படத்தின் நாயகன் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் குடும்பத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் குடும்பத்தலைவரிடம் தான் பிரச்சனையை கூற வேண்டும். அதுபோல தமிழகத்தின் தந்தையும் தாயுமான எடப்பாடி பழனிச்சாமியாரிடம் தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு சொல்ல வேண்டும் என பிகிலுக்காக மன்றாடியுள்ளார்.

இதைக்கவனித்த மீம்ஸ் கிரியேட்டர்கள் சமூக வலைதளங்களில் பட ரிலீஸிற்காக கையேந்தி பிச்சை எடுப்பது போன்று தமிழக அரசிடம் கையேந்தி வருகிறார் எஸ்.ஏ.சி. என சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.