IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

அடிமேல் அடி விழும் பிகில் – வென்று வருவாரா மைக்கேல் ?

0 56

அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா மற்றும் யோகிபாபு ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் அக்டோபர் 25ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் எடிட்டர் ரூபன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், விஜய் வசிக்கும் பகுதியில் வாக்கிற்கு பணம் கொடுக்கும் அரசியல்வாதியை கலாய்க்கும் காட்சி ஒன்று எடுக்கப்பட்டிருந்தது.

அந்த அரசியல்வாதியை விஜய் சிரித்தப்படியே நக்கல் செய்து மக்களிடம் வாங்கிய பணத்தை அவரிடமே திரும்ப வாங்கி கொடுப்பார். இந்தக்காட்சியை படத்திலிருந்து நீக்கிவிட்டதாக தெரிவித்தனர். மேலும் படத்தில் விஜய் – நயன்தாரா காதல் காட்சியும் படத்திலிருந்து நீக்கிவிட்டதாக எடிட்டர் ரூபன் தெரிவித்தார்.

பிகில் ஆடியோ விழாவில் விஜய் அரசியல் பேசியதாக பல்வேறு தரப்பிலிருந்தும் அவருக்கு பாராட்டு மற்றும் எதிர்ப்புகள் கிளம்பியிருந்த நிலையில் தற்போது படத்தில் அரசியல் காட்சிகள் நீக்கியதால் ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளார். மேலும் தீபாவளி சிறப்பு காட்சிக்கு முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டை ரத்து செய்து, பணத்தினை ரசிகர்களுக்கு திருப்பி கொடுக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவிற்கு பிறகு விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அளித்த பேட்டியில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் எங்களுக்கு அப்பா அம்மா எல்லாமே அவருதான். முதல்வர் எடப்பாடி எங்களுக்கு எதிரியல்ல. அவர் எங்களுக்கு ஒரு தந்தையாகவும் தாயுமாக விளங்குகிறார் என காலடியில் விழாத குறையாக பிகில் படத்திற்காக மன்றாடியிருக்கிறார்.

இந்நிலையில் அரசியல் மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் நீக்கப்பட்ட நிலவரம் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.