எனக்கும் லவ் பண்ண ஆசையா இருக்கு! வெட்கப்பட்டு காதலை தெரிவிக்கிறாரா ஷிவானி

Get real time updates directly on you device, subscribe now.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்களிடையே ஏதேனும் ஒரு காதல் ஜோடியாவது இருக்கும் என்ற நிலையில் இந்த சீசன் தொடங்கி ஒருமாதமாகியும் ஒரு காதல் ஜோடி கூட உருவாகவில்லை என பார்வையாளர்கள் கவலையுற்றனர். அவர்களின் கவலையை போக்கும் விதமாக ஷிவானி மற்றும் பாலாஜி இடையே கடந்த இரண்டு நாட்களாக இருவரும் ரொமான்ஸ் செய்து வருகின்றனர்.

ஏற்கனவே நேற்று பாலாஜி மற்றும் ஷிவானி இருவரும் ரொமான்ஸாக பேசி கொண்டிருக்கையில், இதுகுறித்து சம்யுக்தா, என்ன செட் ஆகிடுச்சா பாலாஜி என கேட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று அதிக தங்கம் வைத்திருந்த அர்ச்சனா – பாலாஜி குழுவினர்களுக்கு அதிக அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் மற்ற போட்டியாளர்களை வேலை வாங்கி வருகின்றனர்.

அந்த வகையில் தனக்கு ஷிவானி குடை பிடிக்க வேண்டும் என பாலாஜி வேலை வாங்குகிறார். இதனையடுத்து ஷிவானியும் பாலாஜி செல்லும் இடமெல்லாம் பின்னாடி சென்று குடை பிடித்து வருகிறார். அப்போது ஷிவானி பாடிய பாடலும் ஒலிக்கின்றது.

அதில் தனுஷ் நடித்த விஐபி 2 படத்தில் இருந்து ஒரு பாடலை பாடுகிறார்.
எருமைக்கு கூட புளுகிராஸ் இருக்கு
எனக்காக யோசிக்க உயிராய் இருக்கு
மரத்த சுத்தி டூயட் பாடி
லவ் பண்ண எனக்கும் தான் ஆசை இருக்கு

என்ற பாடலை ஷிவானி பாடிக்கொண்டே பாலாஜிக்கு குடை பிடித்து வருகிறார். இந்த பாடலை பாடும்போது ஷிவானி வெட்கப்படும் காட்சி அவருக்கு காதல் வந்துவிட்டது போல் தெரிவிதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

#balaji #shivani #bigboss 4 tamil #in4net

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More