காதல் இடம்பெறாமல் பிக்பாஸ் நிகழ்ச்சி நகர முடிவதில்லையா…?

Get real time updates directly on you device, subscribe now.

திரைப்படங்களை காட்டிலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கு எப்போதுமே பொதுமக்களிடம் தனி வரவேற்பு உண்டு. அது ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை அனைத்து விதமான மக்களின் மனதையும் கொள்ளை கொண்டவையாகும். இதற்கு சான்றாக விளங்குவது பிக்பாஸ் நிகழ்ச்சியாகும். ஹாலிவுட் முதல் தொடங்கி பாலிவுட், டோலிவுட் மற்றும் கோலிவுட் என அனைத்து விதமான ரசிகர்களின் மனதையும் கவர்ந்த நிகழ்ச்சி ஒன்றாகும்.

இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான நாள் முதல் இன்று வரை நிகழ்ச்சி குறித்த எதிர்பார்ப்பு நாள்தோறும் மக்களிடையே அதிகரித்துக் கொண்டே செல்லும். அதுதான் நிகழ்ச்சியின் வெற்றியாகும். ஒரு திரைப்படத்திற்கு தேவையான காதல், சென்டிமெண்ட், கோபம், ஆசை மற்றும் அழுகை என அனைத்து விதமான நவரசத்தையும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களுக்கு சரி விகிதத்தில் அள்ளித் தருவதனாலேயே அதுகுறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு தொடரிலும் ஏதேனும் இரு போட்டியாளர்களிடையே காதல் என்னும் ஒரு ஈடுபாடு ஒவ்வொரு சீசனிலும் அரங்கேறி வருகிறது. இது சாதாரணமாக தோன்றுகிறதா அல்லது நிகழ்ச்சி டிஆர்பி ரேட்டிங்கிற்காக புகுத்தப்படுகிறதா எனத் தெரியவில்லை. ஆனால் நிகழ்ச்சி முடியும் வரை அந்த காதல் இருவரிடமே சுவாரஸ்யமாக கொண்டு செல்லப்படுகிறது.

இதற்கு முந்தைய சீசனில் ஓவியா – ஆரவ், கவின் – லாஸ்லியா, முகின் – அபிராமி, மஹத் – யாஷிகா ஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா தத்தா – ஆரிக் என ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்களிடையே ஒரு காதல் மலர்வது உறுதி என்பது போலிருக்கிறது. சீசன் முழுவதும் போட்டியாளர்கள் காதலிக்கப்படுவதாக கிசுகிசுக்கப்படுகிறது.

இந்த பிக்பாஸ் 4வது சீசனிலும் பாலாஜி – ஷிவானி என காதல் ஜோடி மலர ஆரம்பித்துள்ளது. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதல் ஜோடிகளாக சுற்றி வருபவர்கள் நிகழ்ச்சி முடிந்து அனைவரும் வெளியே வரும்போது அவர்களின் காதல் என்னவோ தொடராமல் பிரிந்து செல்வதையே வழமையாக கொண்டுள்ளனர்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More