பிக்பாஸ் சீசனில் களைகட்டிய ஷிவானி – பாலாஜி ரொமான்ஸ்

Get real time updates directly on you device, subscribe now.

பிக்பாஸ் சீசன் 4 தமிழில் கடந்த 20 நாட்களாக பேசாமல் அமைதியாக ஷிவானி, தற்போது தொலைக்காட்சி முதல் சமூகவலைதளங்கள் வரை அவரது பேச்சு குறித்து ரசிகர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.

பிக்பாஸ் சீசன் தொடக்கத்திலேயே தனக்கு மிங்கிள் ஆக கொஞ்சம் டைம் ஆகும் என கமல்ஹாசனிடம் தெரிவித்திருந்தார். அதுபோல 20 நாட்கள் கடந்த பின்பு தான் தற்போது உற்சாகமாக பேசத் தொடங்கியுள்ளார் ஷிவானி.

அவர் இந்த சீசனில் பேச ஆரம்பித்தது மட்டுமின்றி பாலாஜியுடன் ரொமான்ஸ் செய்யவும் ஆரம்பித்துவிட்டதாக தெரியவருகிறது. கடந்த இரண்டு நாட்களாக பாலாஜியுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் பிக்பாஸ் நிகழ்ச்சியை சுவாரஸ்யமான கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

இன்று நடைபெறும் ஒரு டாஸ்க்கில் பாலாஜி மற்றும் ஷிவானி இருவரும் விஜய் நடித்த மெர்சல் பட பாடலுக்கு அட்டகாசமாக டான்ஸ் ஆடுகின்றனர். அச்சு அசலாக விஜய் – காஜல் அகர்வால் போலவே அவர்கள் ஆடும் ஆட்டம் போட்டியாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கு ஒரு விருந்தாகவே அமைந்துள்ளது.

ஒவ்வொரு சீசனிலும் ஒரு காதல் ஜோடி, சீசன் முடியும் வரை நல்ல பொழுதுபோக்கு செய்பவர்களாக அமையும். இந்த சீசனிலும் பாலாஜி – ஷிவானி ரொமான்ஸ் காட்சிகள் எப்படி அமையும் என்பதை பொறுந்திருந்து பார்ப்போம் என்கின்றனர் ரசிகர்கள்.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More