IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பிக் பஜாரில் பிரமாண்ட ஷாப்பிங் திருவிழா

192

 

இந்தியாவில் அனைவராலும் விரும்பப்படும் ஹைப்பர் மார்க்கெட்டான பிக் பஜாரில் ஜனவரி 22 முதல் 26 வரை `5 நாள் மலிவு விலை விற்பனை மேளா’ நடைபெறுகிறது. இதில் வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட உள்ளன. இந்தியாவின் பிரமாண்ட ஷாப்பிங் திருவிழாவிற்கு வந்து உங்களுக்கு தேவையான பொருட்களை குறைந்த விலையில் வாங்கிச் செல்லுங்கள். நவநாகரீக ஆடைகளுக்கு 50 சதவீத தள்ளுபடியும், உணவு மற்றும் மளிகை பொருட்கள் 2 வாங்கினால் ஒன்று இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் ரூபே கார்டுகளுக்கு கூடுதலாக 10 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

இந்த `5 நாள் மலிவு விலை விற்பனை மேளா’ இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பிக் பஜார், பிக் பஜார் ஜென் நெக்ஸ்ட் மற்றும் ஹைப்பர் சிட்டி ஸ்டோர்களிலும் நடைபெறும். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் சிக்கனமான குடும்ப வரவு செலவு திட்டங்களுக்கான வழிகளை தேடும் இத்தருணத்தில் பிக் பஜாரின் இந்த 5 நாள் மலிவு விலை விற்பனை மேளா அவர்களுக்கு பயனுள்ளதாக அமையும். இந்த ஆண்டிற்கான விற்பனை மேளா பிரமாண்டமாகவும் மிகச் சிறப்பானதாகவும் அமைய உள்ளது. இதில் மெகா சலுகைகள், காம்போ சலுகைகள், உணவு, பேஷன் பொருட்கள், வீட்டிற்கு தேவையான அலங்கார பொருட்கள், லக்கேஜ், சமையலறை சாதனங்கள், அன்றாட தேவைக்கான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சலுகை விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.

வாடிக்கையாளர்கள் இந்த ஷாப்பிங் திருவிழாவில் மகிழ்ச்சியான அனுபவத்தை பெற முடியும். குறைந்த விலையில் ஏராளமான பொருட்களை வாங்கலாம். உணவு மற்றும் மளிகை பொருட்களில் எந்த 2 பொருட்கள் வாங்கினாலும் அதற்கு ஒன்று இலவசம். பேஷன் பொருட்கள் 50 சதவீத தள்ளுபடியும், 13,505 ரூபாய் மதிப்புள்ள சமையலறை சாதனங்கள் வெறும் 4,999 ரூபாய்க்கும், 39,990 ரூபாய் மதிப்புள்ள 43 இன்ச் கோரியோ டிவி 14,999 ரூபாய்க்கும், அரிஸ்டோகிராட், சபாரி, காம்லியன்ட், ஸ்கைபேக்ஸ் உள்ளிட்ட டிராலி பேக்ஸ் ஆகியவை 70 சதவீத தள்ளுபடி விலையிலும் விற்பனை செய்யப்பட உள்ளது.

`5 நாள் மலிவு விலை விற்பனை மேளா 2020′ குறித்து இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சதாசிவ் நாயக் கூறுகையில், ஒவ்வொரு வீட்டினருக்கும் தினசரி பயன்பாட்டிற்கு, வீட்டு பராமரிப்பு, அழகு சாதன பொருட்கள் மற்றும் இன்னும் பல பொருட்கள் தேவைப்படுகின்றன. இதை மனதில் வைத்தே, இந்த `5 நாள் மலிவு விலை விற்பனை மேளா’ முந்தைய ஆண்டுகளைக்காட்டிலும் மிக பிரமாண்டமாக நடத்தப்படவிருக்கிறது, என்றும் அவர் தெரிவித்தார்.

#BigBazaar #Shoping #Festival