IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

தலைமுடி உதிர்வை தடுக்க கற்றாழை ஷாம்பு வீட்டிலேயே தயார் செய்வது எப்படி ?

Get real time updates directly on you device, subscribe now.

தலைமுடி கொட்டுவதற்கு முக்கியமான காரணம் போதுமான சத்தில்லாத உணவுப்பழக்கம் மற்றும் நமது பழக்கவழக்கங்கள்தாம். பூமி வெப்பமயமாதலும் முடிஉதிர்வுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

முடி உதிர்வு… இது, எல்லா வயதினருக்கும் உள்ள பொதுவான ஒரு பிரச்சனை. பள்ளிக் குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் இந்தப் பிரச்னை இருக்கிறது. ஆண், பெண் பேதமின்றி அனைவருக்கும் இந்தப் பிரச்னை காணப்படுகிறது.

தலைமுடி உதிர்வதை தடுப்பதில் கற்றாழை முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் தற்போதுள்ள கொரோனா ஊரடங்கு காலத்தில் வெளியே சென்று தலைமுடிக்கு தேவையான பொருட்களை வாங்குவது என்பது சாத்தியமில்லாத ஒன்று. அதனை வீட்டிலேயே இயற்கையாக எப்படி தயாரிக்கலாம் என்பதை இங்கு காண்போம்.

கற்றாழையில் உள்ள ஊட்டச்சத்துகள் தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கவும், அடர்த்தியாகவும் வளர உதவுகிறது. எனவே வீட்டில் நீங்களே கற்றாழையில் ஷாம்பூ தயாரித்துப் பயன்படுத்தலாம். இதனால் பக்கவிளைவுகளையும் தவிர்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

தண்ணீர் – 300 ml
பியர்ஸ் சோப் – 1/3 கப்
ஜோஜோபா எண்ணெய் = சிறிதளவு
கற்றாழை சதை -1 கப்
வைட்டமின் ஈ எண்ணெய் – 1 கேப்ஸூல்

செய்முறை :

கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி சோப்பை தண்ணீரில் உருக காய்ச்சுங்கள்.

தோல் நீக்கிய கற்றாழை சதைகளை துண்டாக நறுக்கி மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளவும். சோப்பு தண்ணீர் சூடு ஆறியதும், கற்றாழைச் சாறு அதோடு ஜோஜோபா எண்ணெய், வைட்டமின் இ எண்ணெய் சேர்க்கவும்.

நன்குக் கலந்துவிட்டு டாப்பவில் ஊற்றி பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் கற்றாழை ஷாம்பூ தயார்.

Aromatics and Cosmetics

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader