IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

முதல் அடி எடுத்து வைக்கும் குட்டி யானையின் அழகு

182

குட்டி யானை முதல் அடி எடுத்து வைக்கும் வீடியோ வலைதளங்களில் வரலாகி வருகிறது.

காட்டு யானை ஒன்று குட்டி போட்டுள்ளது. அந்த குட்டி யானை முதல் அடி எடுத்து வைக்கும் வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரியான சுஷந்தா நந்தா நெகிழ்ச்சியான பதிவுடன் ஒரு வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பிறந்த சில மணி நேரங்களே ஆன அந்த குட்டி யானை தட்டி தடுமாறி தனது முதல் அடியை எடுத்து வைக்கிறது. அவரது பதிவில் ஆயிரம் மைல் பயணத்துக்கான முதல் அடி துவங்கியுள்ளது என கூறியிருந்தார்.

பிறக்கும் போது மூன்றடி இருக்கும் குட்டி யானைகள் பிறந்த ஒரு மணி நேரத்தில் நிற்கவும், சில மணி நேரங்களிலே, சுற்றித்திரியவும் துவக்கிவிடும். யானைகளின் பிறப்பு 99 சதவீதம் இரவில் தான் நடக்கிறது. என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ அனைவராலும் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

#beautiful #babyelephant #firststep