IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கொரோனாவிற்கு குட் பை! 3 நாட்களில் தமிழகம் வரும் கொரோனா தடுப்பூசி

Get real time updates directly on you device, subscribe now.

பிசிஜி தடுப்பூசியை பயன்படுத்தி கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு களம் இறங்கியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருப்பதாவது: உலகின் அனைத்து ஆராய்ச்சிகளிலும், தமிழகம் முன்னிலையில் உள்ளது. ஏற்கனவே, கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சையானது சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.

கொரோனா நோயாளிகளிடம் ரெட்மிசிவிர் என்ற மருந்து பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஐசிஎம்ஆர் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பிசிஜி தடுப்பூசியை செலுத்தி முதியோர் உள்ளிட்ட மக்களை காப்பாற்ற கூடிய முயற்சியில் இறங்கி உள்ளோம்.

ஆய்வுக்கு அனுமதி கிடைத்துள்ளது. ஒரு சில நாட்களில் அந்த ஆராய்ச்சி ஆரம்பமாகும். முதலமைச்சர் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 58 இலட்சம் அட்டைகள் உள்ளன. இந்த அட்டை மூலமாக எவ்வித கட்டணமும் இல்லாமல் சிகிச்சை பெறும் வழி வகைகளை முதலமைச்சர் செய்துள்ளார்.

மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் வராத 23 சதவீத மக்களுக்கு தான் தனியார் மருத்துவமனைகளில் கட்டணத்தை நிர்ணயித்துள்ளோம் என்றார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader