IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பி.சி.சி.ஐ. ஒப்பந்த பட்டியலில் இருந்து தோனி நீக்கம்: ரசிகர்கள் அதிர்ச்சி

62

 

பி.சி.சி.ஐ. ஒப்பந்த பட்டியலில் இருந்து முன்னாள் கேப்டன் தோனி நீக்கப்பட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி. இவரது தலைமையின் கீழ் இந்திய அணி 50 ஓவர் உலக கோப்பை, 20 ஓவர் உலக கோப்பைகளை வென்று சாதனை படைத்தது. கடந்த 2019ம் நடைபெற்ற உலக கோப்பை அரையிறுதி போட்டிக்கு பின்னர் எந்த ஆட்டத்திலும் பங்கேற்க வில்லை.

இவ்வாண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் சென்னையை அணியை வழிநடத்தவுள்ள அவர் அதற்கு முன்னதாக சில போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது பி.சி.சி.ஐ. ஒப்பந்த பட்டியலில் இருந்து அவரது பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பிட்ட காலக்கட்டத்தில் குறைந்தது 3 டி20 போட்டிகளிலாவது ஆடினால்தான், அந்த வீரரின் பெயர், ஊதிய ஒப்பந்த பட்டியலில் இடம்பெறும். தோனி கடந்த 6 மாதங்களில் ஒரு போட்டியில் கூட ஆடவில்லை. ஆகவே தான் அவரது பெயரை 2020ம் ஆண்டுக்கான ஊதிய ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கியுள்ளதாக பிசிசிஐ. தெரிவித்துள்ளது. இருப்பினும் தோனி பெயர் நீக்கியதற்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

#BCCI #Dhoni #removed #contract #list