IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

எடையை குறைக்க வேண்டுமா? பாதாம் பருப்பு சாப்பிடுங்க

107


நம் அன்றாட வாழ்வில் உபயோகப்படுத்தும் பருப்பு வகைகளில் பல வகைகள் உள்ளன. அதில் பாதாம் பருப்பும் ஒன்று அதில் ஏராளமான நார்சத்துகள், புரோட்டீன், கொழுப்பு, காணப்படுவதால் உடல் எடை கூடுமா குறையுமா என்ற சந்தேகம் சிலருக்கு உள்ளது. மேலும் பாதாம் பருப்பை அப்படியே சாப்பிடலாம் எனவும் ஊறவைத்து தோலை நீக்கி விட்டு சாப்பிடலாம் எனவும் சொல்வார்கள்.


பாதாம் பருப்பு சாப்பிடுவதால் நம் உடலுக்கு அதிகமான புரதச்சத்து கிடைக்கிறது. மேலும் அதுமட்டுமின்றி பாதாம் நமது உடலில் ஜீரண சக்தி அதிகரிக்கும் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். உடலில் ஓடும் ரத்தம் சீரான முறையில் இருக்க ரத்தத்தில் சரியான விதத்தில் அனைத்து சத்துக்களும் இருக்க வேண்டும். ரத்தத்தில் வெள்ளை மற்றும் சிகப்பு அணுக்களை பெருக்கும் சக்தி பாதாம் பருப்புக்கு அதிகம் உண்டு.


எடை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள், வாரத்தில் 2 முறை ஐந்து பாதாம் சாப்பிட்டு வந்தால் 31 சதவீதம் எடை குறையும். கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உண்பவர்களுக்கு இதயம் சம்பந்தமான நோய்கள் அதிகம் ஏற்படுகிறது. பாதாம் பருப்புகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட கொழுப்பு சத்துக்கள் இல்லை. எனவே இப்பருப்புகளை அதிகம் உண்பவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு.


பாதாம் பருப்பில் மெலனின் மற்றும் கேரட்டின் புரதங்கள் அதிகளவு உள்ளன. பாதாம் பருப்புகளை தொடர்ந்து உண்டு வருபவர்களுக்கு தலைமுடி உதிர்தல் குறைபாடு நீங்கும். மேலும் இளம் வயதிலேயே தலை முடி நரைத்தல் போன்ற பிரச்சனையும் சரியாகும். பாதாம் பருப்புகளை கருவுற்றிருக்கும் பெண்கள் சரியான விகிதத்தில் உட்கொண்டு வருவது, அவர்களுக்கும் அவர்கள் வயிற்றில் வளரும் கருவிற்கும் நன்மை தரும்.


தினமும் இரவில் 10 பாதாம் பருப்பை நீரில் ஊறவைத்து கலையில் அதன் தோலை நீக்கி அரைத்து பால் அல்லது வெந்நீரில் கலந்து குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும். நமது உடலை வெளிப்புற சூழலிலிருந்து காக்கும் கவசமாக மேற்புற தோல் செயல்படுகிரது நமது உடலை வெளிப்புற சூழலிலிருந்து காக்கும் கவசமாக மேற்புற தோல் செயலாற்றுகிறது. பாதாம் பருப்புகளில் தோலுக்கு நெகிழ்வு தன்மை, புத்துணர்வு பெற செய்யும் ரசாயனங்கள் அதிகம் உள்ளன. இது தோலுக்கு அதிக பளபளப்பை தருகிறது.


#batham #benefits