IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

சுபஸ்ரீ இறந்ததற்கு காத்துதான் காரணமாம்..! அதனால காத்து மேல கேஸ் போட செல்றாரு பொன்னையன்..!

56


பேனர் விழுந்து இறந்த சுபஸ்ரீயின் மரணம் எதார்த்தமாக நடந்தது. அதற்காக அதிமுக கவுன்சிலர் மீது பழி போடக்கூடாது, காற்றின் மேல் தான் வழக்கு போட வேண்டும் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறியுள்ளார்


சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த பி.டெக் பட்டதாரி சுபஸ்ரீ(23) கனடா செல்வதற்காக தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பள்ளிக்கரணையில் முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஜெயகோபால் அவரது மகன் திருமணத்திற்காக அனுமதியின்றி வைத்த பேனர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த சுபஸ்ரீயின் மேல் விழுந்த விபத்தில் அவர் இறந்தார். இந்த சம்பவம் தமிழ்நாட்டையை உலுக்கியது.


பேனர் விவகாரம் தொடர்பாக தேமுதிக பொருளாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா சென்னை ஆவடியில் தேமுதிக கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது பேனர் விழுந்து பலியான சுபஸ்ரீயின் மரணம் எதார்த்தமானது.


சுபஸ்ரீ இருசக்கர வாகனத்தில் வந்தது, அவர் மீது பேனர் விழுந்தது, பின்னால் வந்த லாரி அவர்மீது ஏறி இறங்கியது எல்லாம் விதி. அவர் இறந்தது வருத்தம்தான். தமிழ்நாட்டில் எங்குதான் பேனர் இல்லை. எல்லா இடத்திலும் தான் பேனர் வைக்கப்படுகிறது. இவ்வாறு நிகழ்ச்சியில் பிரேமலதா பேசினார். இது பெறும் சர்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தற்போது அதிமுகவின் முன்னாள் அமைச்சரரும், மூத்த தலைவருமான பொன்னையன் பேனர் விவகாரம் தொடர்பாக பேசியிருக்கும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் காற்றடித்ததால் தான் பேனர் விழுந்தது, பேனர் வைத்தவர் யாரும் போய் தள்ளிவிட வில்லை, வழக்கு போட வேண்டும் என்றால் காற்றின் மேல் தான் வழக்கு தொடர வேண்டும் என்று கூறியது பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


#banner #issue #ponnaiyan #speech