IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

பேனர் வைக்கலைனா பிரதமர் கோவிச்சிக்குவாரா என்ன ? சுபஸ்ரீ தாயின் நியாயமான கேள்வி

Get real time updates directly on you device, subscribe now.


சில வாரங்களுக்கு முன் சென்னை பள்ளிக்கரனையில் பேனர் விபத்தால் சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்தார். இந்த இறப்பிற்கு பேனர் தான் காரணம் என்று நீதிமன்றம் எச்சரித்த பிறகு அதற்கு காரணமான நபர்களை போலீசார் கைது செய்தனர்.


மேலும் பொதுமக்களுக்கு இடையூறு தரும் பிளக்ஸ் பேனரை நகர்ப்புறங்களில் ஒட்ட அனுமதிக்கக்கூடாது என்று காவல்துறை மற்றும் மாநகராட்சி அலுவலகர்களுக்கு எச்சரிக்கை நோட்டிஸ் அனுப்பியிருந்தனர். இந்நிலையில் பிரதமர் மோடி சீன அதிபருடன் மகாபலிபுரத்திற்கு வருகை தரவுள்ளார். இந்நிலையில் பேனர் ஒட்ட தமிழக அரசு உயர்நீதி மன்றத்தில் அனுமதி பெற்றுள்ளது.
கனவாகிப் போன கனடா கனவு – கதறி அழும் சுபஸ்ரீயின் நண்பர்கள்


சுபஸ்ரீயின் மறைவுக்குப் பின் பேனர்‌ கலாச்சாரம் முடிவுக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில், மீண்டும் பேனர் வைக்க அனுமதி பெறப்பட்டிருப்பது கவலை அளிப்பதாக அவரின் தாய் கீதா தெரிவித்துள்ளார்.


தமிழக அரசின் முடிவால் பேனர் கலாச்சாரம் மீண்டும் தொடர வாய்ப்புள்ளதாகக் கூறினார். சுபஸ்ரீ பேனர் விபத்தில் சிக்கியது எப்படி?மேலும், ‘பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி விழும் என்பது கேள்விக்குறி ஆகியுள்ளது என்றார்.


பேனர் வைத்துதான் பிரதமரை வரவேற்க‌ வேண்டுமா? சுபஸ்ரீயின் ஆன்மா சாந்தியடையும் என எதிர்பார்த்தோம். சுபஸ்ரீயின் மறைவே இறுதியாக இருக்கும் என்று நினைத்தோம்.’ எனத் தெரிவித்தார்.
சுபஸ்ரீயின் ஆவி பேசுகிறேன் !


ஆனால் சுபஸ்ரீயின் மரணம் நடந்து ஒருமாத காலம் கூட கடக்க வில்லை. அதற்குள் மீண்டும் பேனர் வைத்து பிரதமரை வரவேற்க தமிழக அரசு தயாராகி விட்டது. அன்று ரகு, இன்று சுபஸ்ரீ, நாளை யார் என தெரியவில்லை. இனி எத்தனை உயிர்கள் தான் பழி கொடுத்தும் பேனர் கலாச்சாரத்தை அடியோடு ஒழிப்பார்கள் என்று சமூக ஆர்வலர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
#Subasri #BannerCase #NarendraModi #In4Net

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader