வங்கி ஓடிபி மற்றும் டிஜிட்டல் திருட்டு குறித்து எச்சரிக்கை

Get real time updates directly on you device, subscribe now.

சமீபநாட்களாக இணையம் வழியாகப் பணத்தைத் திருடுவது அதிகரித்து வருகிறது. இணைய நுணுக்களில் எச்சரிக்கையாக உள்ளவர்களும் இதில் ஏமாந்து விடுவது அதிர்ச்சியளிக்கிறது. மேலும் திருடுபவர்கள் தங்கள் வழிமுறைகளை மிகத்திறமையாக மெருகேற்றி வருகிறார்கள்.

சில தினங்களுக்கு முன் ஒருவரின் மொபைலுக்கு அவரின் Kotak வங்கிக்கணக்கு முடக்கப்பட்டதாகக் குறுந்தகவல் (SMS) லிங்க்குடன் வந்ததால், அதிர்ச்சியாகி க்ளிக் செய்து OTP கொடுத்ததில், அவரது கணக்கில் இருந்து ரூ.25,000 பணத்தினை இழந்துள்ளார்.

இதில் குறிப்பிட வேண்டியது, பாதிக்கப்பட்டவர் எச்சரிக்கையாக இருப்பவர் ஆனால், வங்கிப்பெயரில் விவரங்கள் வந்ததால் சிறு கவனக்குறைவு / அல்லது வேறு ஏதோ நினைவால் இருந்ததால் இந்நிலை ஏற்பட்டு விட்டது.

அவர் செய்த இரு தவறுகள்

1. இது போலக் குறுந்தகவல் வந்த பிறகு, தன் வங்கிக் கணக்குச் சரியாக உள்ளதா இல்லையா என்பதை முதலில் பரிசோதிக்கவில்லை.
2. குறுந்தகவலில் வந்த லிங்கை க்ளிக் செய்து, அங்கே OTP கொடுத்தது.

வழக்கமான Kotak Mahindra Bank இணையதள முகப்பு என்பதால், எந்தச் சந்தேகமும் வரவில்லை, OTP யைப் பதிவு செய்து விட்டார்.

இரு முறையும் OTP தவறு என்று கூறியதால், சந்தேகப்பட்டு நிறுத்தி, மொபைலை Restart செய்துள்ளார் ஆனால், இடைப்பட்ட நேரத்தில் பணம் களவாடப்பட்டு விட்டது.

வங்கியிலும், சைபர் க்ரைமிலும் புகார் செய்யப்பட்டுள்ளது ஆனால், இன்னும் பணம் திரும்பப் பெற முடியவில்லை. இன்னமும் இது போல SMS வந்துகொண்டுள்ளது.

கவனக்குறைவு

லிங்க்கை பார்த்தால் வழக்கமான லிங்க்காக இல்லையென்பதால் சந்தேகம் வந்து இருக்க வேண்டும் ஆனால், வங்கி விவரங்கள் முதன்மையாகக் கண்களுக்குத் தெரிவதால், மற்றவை கவனத்தில் இரண்டாம் பட்சமாகி விடும்.

அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், மனது தெளிவாக இல்லாத நேரத்தில் / கவனக்குறைவாக இருக்கும் நேரத்தில் ஏமாந்து விடுவோம்.

எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும், ஒரு நொடி கவனக்குறைவு சிக்கலில் விட்டு விடும். எனவே, நானெல்லாம் இதைச் செய்ய மாட்டேன் என்று நினைத்து அதீத நம்பிக்கையில் இருக்க வேண்டாம். அனைவருக்கும் இது பொருந்தும்.

எந்தச் சூழ்நிலையிலும் குறுந்தகவலில் வரும் லிங்கை க்ளிக் செய்யாதீர்கள், மறந்தும் யாருக்கும் OTP கொடுக்காதீர்கள். உங்கள் OTP விவரங்களை 100% வங்கி கேட்காது. வங்கியில் இருந்து பேசுவது போலவே பேசுவார்கள், விவரங்களைக் கூறுவார்கள் / கேட்பார்கள். என்ன கூறினாலும், கேட்டாலும் OTP கொடுக்க வேண்டாம்.

தற்போது வங்கியில் இருந்து அனுப்புவதைப் போலவே SMS அனுப்புகிறார்கள், அதாவது VD-HDFCBK போல. OTP SPAM SCAM அடுத்த கட்டத்துக்குச் சென்று விட்டது.

அழைப்புகளும் வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து வருவது போலவே உள்ளது. Truecaller App நிறுவிக்கொள்வது ஓரளவு சேதாரத்தை தவிர்க்கலாம். அவர்கள் கூறும், எந்த ஒரு செயலியையும் (App) மொபைலில் நிறுவ வேண்டாம். சிறு கவனக்குறைவு கூட வாழ்நாள் சேமிப்பை காலி செய்து விடும். எச்சரிக்கை!

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader