IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கொரோனாவை காரணம் காட்டி மோசடி கும்பல்! வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் வங்கிகள்

Get real time updates directly on you device, subscribe now.

செல்போன் மூலமாக வங்கிகளிலிருந்து பேசுவதாக கூறி யாரெனும் வங்கிக்கணக்கு விபரங்கள், இஎம்ஐ ஒத்தி வைப்பு என்று கூறி ஓடிபி எண்ணை கேட்டால், பகிர வேண்டாம் என்று வங்கிகள் வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளனர்.

கொரோனா வைரஸினால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும் என்பதால் அரசாங்கம், மக்கள் வசதிக்காக சில சலுகைகளை அறிவித்துள்ளனர்.

அதன் ஒருபகுதியாக , அடுத்த 3 மாதங்களுக்கான இஎம்ஐ-களை செலுத்த தேவை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் பணபுழக்கம் இல்லாமல் பெரும் அவதிபட்டு சூழ்நிலையிலும் மோசடி செய்பவர்கள் ஏதேனும் ஒரு வகையில் ஏமாற்றி வருகின்றனர்.

அதற்கு இந்த கொரோனா ஊரடங்கு காலத்தை பயன்படுத்துகின்றனர். பொதுமக்களும் வீட்டை விட்டு வெளியே வராத சூழ்நிலையை பயன்படுத்தி மோசடி செய்ய துணிந்துள்ளனர்.

உங்களது போனுக்கு கால் செய்து உங்களது இஎம்ஐ யை ஒத்தி வைக்க வேண்டும் என்றால் உங்கள் மொபைலுக்கு வரும் ஓடிபி எண்ணை கூறுமாறு அறிவுறுத்துகின்றனர். ஓடிபி எண்ணை தெரிவித்தவுடன் வங்கிக்கணக்கில் இருந்து பணம் திருடப்படுகிறது.

எனவே, யாரேனும் போன் அழைப்பு மூலமாக உங்களது வங்கி கணக்கிலிருந்து வரும் ஓடிபி எண்ணை கேட்டால் யாரிடமும் தெரிவிக்காமல், கவனமாக இருக்குமாறு அனைத்து வங்கிகளும் எச்சரித்துள்ளன. வாடிக்கையாளர்கள் இது பற்றி போன் வந்தால் வங்கிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More