IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

சூட்டைத் தணிக்கும் கற்பூரவள்ளி! எடையைக் குறைக்கும் ரஸ்தாளி!!

22


வாழைப்பழம் முக்கனிகளில் ஒன்று ஆகும். இது, அனைவரும் சாப்பிட கூடிய வகையில் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கக் கூடியது. வாழைப்பழம் அனைத்து காலங்களிலும் கிடைக்க கூடிய பழமாகும். வாழைப்பழத்தில் பல வகைகள் உள்ளன. செவ்வாழை, ரஸ்தாளி, கற்பூரவள்ளி, பூவன் பழம், பச்சைப்பழம், மலைப்பழம், நேந்திரன் வாழைப்பழம் போன்ற வகைகள் உள்ளன. வைட்டமின் ஏ, வைட்டமின் பி-6, வைட்டமின் சி, மக்னீசியம், நார்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்துள்ளன. இவை அனைத்து வாழைப்பழங்களிலும் உள்ளன.

எப்பேர்பட்ட சிறுநீர் கல்லையும் கரைக்க அற்புத மருந்து நாவல் பழம்


பெண் பூப்படைந்த வைபவம் என்றாலும் சரி, திருமண நிச்சயதார்த்தம் என்றாலும் சரி, திருமணம் என்றாலும் சரி மற்றும் எந்த சுபவிழாக்களாக இருந்தாலும் சரி, அங்கே முதலிடம் பிடிப்பது வாழைப்பழம்தான். வாழைப்பழம் உணவை எளிதில் ஜீரணிக்க செய்யும் சக்தி கொண்டது.மேலும், உடலில் ரத்தத்தை அதிகரிக்கவும் செய்யும். அடிக்கடி வாழைப்பழம் சாப்பிடுபவர்களுக்கு குடல் புண்கள் வராது. எந்தெந்த வாழைப்பழத்திற்கு என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் என்பது பற்றி காண்போம்

செவ்வாழை:


வாழை பழங்களில் அதிக தாது உடைய பழம் செவ்வாழைப் பழம் ஆகும். இதில் பீட்டா கரோட்டீன், பொட்டாசியம், வைட்டமின்-சி, ஆன்டி ஆக்ஸிடென்ட், நார்ச்சத்து போன்றவை இருக்கிறது. தொற்றுநோய் கிருமிகளைக் கொல்லும் ஆற்றல் கொண்டவை. சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதைத் தடுக்கிறது. மேலும் மலச்சிக்கலை குணப்படுத்துகிறது. மாலைக்கண் நோய், கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். தினம் ஒன்று சாப்பிட்டு வந்தால் பார்வை தெளிவாகும்.

ரஸ்தாளி:


உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. மேலும் உடல் சோர்வும் நீங்கும். தினமும் இரவு ரஸ்தாளி உட்கொண்டால் தூக்கமின்மை பிரச்சினை சரியாகும். அத்தோடு மன அழுத்தமும் குறையும். உடலின் ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தும்.


இத்துனூண்டு பூண்டுக்குள்ளே இத்தனை நன்மைகளா?!

கற்பூரவள்ளி:


உடலுக்கு தேவையான ஜீரன சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. உடல் சூட்டைத் தணிக்க வல்லது. உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. மேலும் நரம்புகளுக்கு வலுவினைத் தருகிறது. தோலில் ஏற்படும் சொறி, சிரங்குங்கள் மற்றும் புண்களை விரைவில் குணப்படுத்தும் தன்மை கொண்டது.

பூவன் பழம்:


பூவன் பழம் ஜீரண சக்தியை அதிகரிக்க கூடிய தன்மை கொண்டது. இரத்த விருத்தியைத் அதிகரிக்குறது. தசைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியது. இரவு உணவுக்கு பின் இந்த பழத்தை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்ப்படாது. ஆஸ்துமா உள்ளவர்கள், குளிர்ச்சியான உடல் கொண்டவர்கள் இந்த பழத்தை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.

பச்சைப்பழம்:



பச்சை வாழைப்பழத்தை நீண்ட நாட்கள் வைத்திருக்க முடியாது. கனிந்த உடனேயே சாப்பிட்டு விட வேண்டும். இதனை குறைந்த அளவு மட்டுமே உண்ண வேண்டும். குளிர்ச்சி தன்மை உடையது. எனவே உடல் உஷ்ணம் உள்ளவர்கள் இதனை சாப்பிடலாம். காச நோய், ஆஸ்துமா, வாத நோய் உள்ளவர்கள் இதனை சாப்பிடாமல் இருப்பது நல்லது. பித்தத்தை அதிகப்படுத்துவதால் குறைந்த அளவே சாப்பிட வேண்டும். மலச்சிக்கலை போக்க வல்லது.

நட்டநடு ராத்திரி வரை கொட்ட கொட்ட விழித்திருக்கும் குழந்தைகளை தூங்க வைக்க சில டிப்ஸ்கள்!

மலைப்பழம்:


மலைப்பழம் சற்று விலை அதிகமாக இருக்கும். வாத நோய் உள்ளவர்களை தவிர மற்றவர்கள் இதனை சாப்பிடலாம். பகல், இரவு உணவுக்கு பின்னர் சற்று நேரம் கழித்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் விருத்தியாகும். உடல் வலு பெரும்.

நேந்திரன் வாழைப்பழம் :


நேந்திரன் வாழைப்பழம் கேரளாவில் புகழ் பெற்றது. வாசனையாகவும், உடலுக்கு குளிர்ச்சியையும் தரக்கூடியது. அதிகமான பொட்டாசியம் இந்த பழத்தில் இருப்பதால் இந்த பழம் தினமும் காலை உணவுக்கு பின் எடுத்துக் கொண்டால் இதயத்துக்கு நல்லது. கெட்ட கொழுப்பை குறைக்கும். மலச்சிக்கலை கட்டுப்படுத்தி செரிமானத்தை அதிகரிக்கும்.


#banana #tips


மாதவிடாய் பிரச்சினைக்கு தீர்வு தரும் மாதுளை!