IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

வாழைப்பழ பேஷியல்

banana facial tips

Get real time updates directly on you device, subscribe now.


குளிர்காலத்தில் மட்டும் அல்லாது கோடைக்காலத்திலும் அனைவருக்கும் சரும வறட்சி ஏற்படும். எப்படியெனில்
சூரியக்கதிர்கள் சருமத்தை நேரடியாக தக்கி சருமத்தில் உள்ள நீர்ச்சத்தை முற்றிலும் உறிஞ்சிவிடுகின்றன. இதனால்
உடலில் நீர் வறட்சி ஏற்பட்டு சருமம் அதிகம் வறட்சியடையும். குறிப்பாக சிலருக்கு கோடையில் உதடு வெடிப்புகள்
ஏற்படும். சூரியக்கதிர்கள் சருமத்தில் அதிகம் படுவதால் சரும செல்கள் அதிகம் பாதிப்படைந்துவிடும்.


ஆகவே அதனை புத்துணர்ச்சியூட்டவும், சரும செல்களுக்கு புத்துயிர் அளிக்கவும் அவ்வப்போது கோடையில் சருமத்திற்கு
போதிய பராமரிப்புகளை மேற்கொள்ள வேண்டும். அப்படி மேற்கொள்ளும் பராமரிப்புகளில் வாழைப்பழத்தை சேர்த்துக்
கொண்டால் அதில் உள்ள சத்துகள் சரும செல்களை ஆரோக்கியமாக ஒன்று என்பதால் அதனைக் கொண்டு விடுமுறை
நாட்களில் அல்லது நேரம் கிடைக்கும் போது ஃபேஸ் பேக் போட்டு வந்தால் அழகாக காட்சியளிக்கலாம்.

  • வாழைப்பழம் மற்றும் ஆலிவ் ஆயில் வாழைப்பழத்தை மசித்து அதில் சிரிது தேன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம்
    ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி செய்தால் சரும சுருக்கங்கள் மறைந்து முகம் பொலிவோடு புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

  • கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அதில் 1 டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகம் மென்மையாகவும், பொலிவோடும், வறட்சியின்றி இருக்கும்.

  • வைட்டமின் ஈ மத்திரை பொடி, மசித்த வாழைப்பழம், மற்றும் தேன் சிறிது சேர்த்து கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம்
    ஊற வைத்து கழுவினால் முகத்தில் உள்ள கருமை, வறட்சி போன்றவை நீங்கி முகம் புத்துணர்ச்சியோடு காணப்படும்.

  • கனிந்த வாழைப்பழம், மற்றும் அதில் 1 டேபிள் ஸ்பூன் எழுமிச்சை சாறு சேர்த்து கலந்து முகம், கழுத்தில் தடவி 1015 நிமிடங்கள் ஊறவைத்து
    கழுவினால், பாதிப்படைந்த சரும செல்கள் புதுப்பிக்கப்படும்.


#Banana # Facial #Tips

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader