IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

நீங்க எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கே வாக்கு விழும் – மேடையில் உளறிக் கொட்டிய பாஜக எம்.பி.

56

அரியானா மாநில சட்டசபை தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. இம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய பா.ஜ.க. வேட்பாளர் பக்‌ஷி‌‌ஷ் சிங் விர்க், மின்னணு வாக்கு இயந்திரத்தில் நீங்கள் எந்த பட்டனை அழுத்தினாலும் அது தாமரைக்கே வாக்கு விழும் எனவும். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் வாக்குப்பதிவு எந்திரங்களில் செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரத்தில் அவர், இவ்வாறு பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அவரிடம் விளக்கம் கேட்டு தேர்தல் கமிஷன் நோட்டிஸ் அனுப்பியுள்ளது. மேலும் அவரது தொகுதியில் வாக்கு மையத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்கு இயந்திரங்களையும் ஆய்வு செய்ய ஒருவரையும் நியமித்தது.

மேலும் இவரது பேச்சு பாஜக கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது பேச்சிற்கு பலரும் தங்களது கண்டனங்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ரகுல் காந்தியும் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் பாஜகவில் உள்ள மிகவும் நேர்மையான மனிதன் என்றும் ராகுல் கிண்டலாக தெரிவித்துள்ளார்.