IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

அயோத்தி தீர்ப்பு – சர்ச்சைக்குரிய இடம் இந்து மக்களுக்கே சொந்தம்… சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

Get real time updates directly on you device, subscribe now.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.27 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற பிரச்சனை நீண்ட காலமாக தொடர்ந்து வந்துள்ள நிலையில், இன்று சுப்ரீம் கோர்ட் அளித்த பரபரப்பான தீர்ப்பில் அந்த இடம் இந்து மக்களுக்குத் தான் சொந்தம் என தீர்ப்பளித்துள்ளது.

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.27 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற பிரச்சனை ஏறத்தாழ 100 ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது. இதுகுறித்த வழக்கில் 2010-ம் ஆண்டு அலகாபாத் ஐகோர்ட் அந்த நிலத்தை சன்னி வக்பு வாரியம், ராம் லல்லா, ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாக பிரித்துக் கொள்ளுமாறு தீர்ப்பளிக்கப்ப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் சந்திரசூட், டி.ஒய். , எஸ்.ஏ.பாப்டே, அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகிய 5பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து இன்று ஒருமனதாக தீர்ப்பளித்தது.

ஆனால் சர்ச்சைக்குரிய இடம், உரிமை கோரிய 3 அமைப்புகளுக்கும் சொந்தமல்ல. மசூதி இருந்த இடம் முழுவதும் தங்களுக்கு தான் சொந்தம் என இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை. மேலும் அலகாபாத் கோர்ட் இடத்தை 3ஆக பிரித்து கொடுத்தது தவறு.

சர்ச்சைக்குரிய 2.27 ஏக்கர் நிலத்தை அந்து அமைப்புகளிடம் வழங்க வேண்டும். அவர்கள் அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டலாம். இதற்கு மத்திய அரசு 3 மாதங்களில் ஒரு அறக்கட்டளையை நிறுவ வேண்டும். அரசு விரும்பினார் நிர்மோகி அகோராவுக்கு அறக்கட்டளையில் பிரதிநிதித்துவம் தரலாம். அதுவரை அந்த இடம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

இஸ்லாமியர்களுக்கு அயோத்தியிலேயே மசூதி கட்ட சன்னி வக்பு வாரியத்துக்கு 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும். இஸ்லாமியர்கள் விரும்பும் இடத்தில் 3 மாதங்களுக்குள் மாநில அரசு அந்த இடத்தை வழங்க வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
#AyodhyaJudgment #BabriMasjid #RamMandir #JaiShriRam

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader