IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

அயோத்தி தீர்ப்பு குறித்து ரஜினிகாந்த் பரபரப்பு தகவல்

Get real time updates directly on you device, subscribe now.

நாடே எதிர்பார்த்துக் கொண்டிருந்த அயோத்தி தீர்ப்கை சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பின் படி சர்ச்சைக்குரிய 2.27 ஏக்கர் நிலம் இந்து மக்களுக்கு சொந்தம் என்றும், அதே சமயம் அயோத்தியில் இஸ்லாமியர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி தர மத்திய அரசு இடம் தரவேண்டும் என்று தீர்ப்பல் கூறப்பட்டிருந்தது.

இந்த தீர்ப்பு வரலாற்று மிக்க தீர்ப்பு எனக்கூறி பலபேர் பாராட்டி வருகின்றனர். ஒருசிலர் மட்டும் இஸ்லாமியர்களுக்கு எதிரானவை என்று தீர்ப்பு குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது வீட்டின் முன்னே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அயோத்தி தீர்ப்பு குறித்து பேசியதாவது, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நான் மதிக்கின்றேன்.

மேலும் இந்த தீர்ப்பை அனைவரும் பாகுபாடின்றி மதிக்கவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இந்திய நாட்டின் வளர்ச்சிக்காகவும் நன்மைக்காகவும், அனைத்து மதத்தினரும் மதவேறுபாடின்றி ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader