IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மலேசிய அமைப்பின் விருதுபெற்ற இணைப்பேராசிரியர்

Get real time updates directly on you device, subscribe now.

திண்டுக்கல் மாநகரில் இயங்கி வரும் PSNA கல்லூரியில் வணிகமேலாண்மைத் துறை இணைப்பேராசிரியராகவும், ஆராய்ச்சி மேற்பார்வையாளர் பொறுப்பும் வகிக்கிறார் முனைவர் பாக்கியலட்சுமி ராஜாராம். மேலும் இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் புஸ்கரம் வேளாண்மை கல்லூரியில் மூத்த கல்வி ஆலோசனை குழு ஆலோசகராக உள்ளார்.

இவர், கோவிட் -19 ஊரடங்கு காலத்தில் சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பெண்கள் மேம்பாடு என்ற பிரிவுகளில் மற்றும் அதன் தலைப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிக அளவிலான இணையவழிக் கருத்தரங்குகளில் பங்குகொண்டும் தனது படைப்புகளை வெளிப்படுத்தியும் தனது திறமைகளை சர்வதேச அளவில் பறைசாற்றியுள்ளார்.

இவரது சாதனைகளைப் பாராட்டி மலேசிய நாட்டின் ஆரஞ்சு வேர்ல்ட் ரெகார்ட் அமைப்பு ஆரஞ்சு வேர்ல்ட் ரெகார்ட் மலேசியா, ஆகஸ்ட் – 2020 என்ற விருதை வழங்கி கௌரவித்தது. மேலும் அதே ஆரஞ்சு வேர்ல்ட் ரெகார்ட் மலேசியா அமைப்பு இவருக்கு 2020ஆம் ஆண்டிற்க்கான சிறந்த நல்லாசிரியர் விருதையும் அளித்து கௌரவ படுத்தியது.

Your Digital PR

 

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader