நாடக நடிகருக்காக அர்ப்பணித்த படம் அவ்வை சண்முகி

Get real time updates directly on you device, subscribe now.

மிசஸ் டவுட்பயர் எனும் ஆங்கிலப்படத்தை தழுவி வெளியான காமெடி குடும்ப படம் அவ்வை சண்முகி. அவ்வை டி.கே.சண்முகம் எனும் மேடை நாடகத்தில் பெண் வேடங்களில் அதிகமாக நடித்திருப்பார். அவருக்கு இப்படத்தை அர்ப்பணித்தார் கமல். இதனாலேயே இந்தப்படத்திற்கு அவ்வை சண்முகி என பெயர் சூட்டப்பட்டது.

நம்மை தெளிய வைத்து தெளிய வைத்து வயிறு குலுங்க சிரிக்க வைத்த படம் அவ்வை சண்முகி. கமலும், மீனாவும் காதல் திருமணம் செய்துக் கொள்கின்றனர். ஆனால் பொருளாதார சிக்கல் காரணமாக மீனா, விவாகரத்து பெற்று தன் குழந்தையுடன் பிரிந்து செல்கிறார்.

கண்டிப்புமிக்க விஸ்வநாதன் அய்யர் கதாபாத்திரத்தில் சிவாஜி கணேசன் நடிக்கவிருந்தார்.அவரின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், ஜெமினி கணேசன் நடித்தார். ஜெமினி கணேசனுக்காகவே, சண்முகியை காதலிக்கும் நபராக, விஸ்வநாதன் அய்யர் கதாபாத்திரம் மாற்றப்பட்டது.

மாமனார் வீட்டில் இருக்கும், காதல் மனைவியை சமாதானம் செய்ய, அவர் வீட்டிற்கு வேலைக்கார பெண்ணாக, வேடமிட்டு செல்கிறார், கமல். இதனால் ஏற்படும் களேபரங்கள் தான், திரைக்கதை.

கணவன் மனைவி சண்டையினால் இவர்களுக்கு பிறந்த பெண் குழந்தை அம்மாவிடம் தான் வளர வேண்டும் என நீதிமன்ற அறிவிப்பால் மகளை விட்டு பிரிந்த தந்தை கமல் மகளுக்காக பெண் வேடம் தரிப்பார். அதன்பிறகு நடக்கும் காட்சிகள் அனைத்தும் தியேட்டரையே அதிரும் அளவிற்கு நகைச்சுவையில் கலக்கியிருப்பார் கமல்.

கமல் ஹாசனா இது! என, ஆச்சரியப்படும் வகையில், சண்முகி மாமியாகவே மாறியிருந்தார். ஒப்பனைக்காக மட்டும், மூன்றரை மணி நேரம் ஆனதாம். மீனாவின் தந்தை, கண்டிப்புமிக்க விஸ்வநாதன் அய்யர் கதாபாத்திரத்தில் சிவாஜி கணேசன் நடிக்கவிருந்தார்.

ஆனால் அவரின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், ஜெமினி கணேசன் நடித்தார். ஜெமினி கணேசனுக்காகவே, சண்முகியை காதலிக்கும் நபராக, விஸ்வநாதன் அய்யர் கதாபாத்திரம் மாற்றப்பட்டது.

நாகேஷ், டெல்லி கணேஷ், மணிவண்ணன், நாசர் ஆகியோர் தான், படத்தின் நான்கு துாண்கள் எனலாம். கிடைக்கும் இடத்தில் எல்லாம் சிரிப்பில் சிக்ஸர் அடித்தனர். தேவா இசையில் ருக்கு ருக்கு, கல்யாணம் கச்சேரி, வேலை வேலை, காதலா காதலா… என அனைத்து பாடல்களும் வெற்றி பெற்றன. இப்படம் சாச்சி 420 என, ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More