IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ஆவாரம்பூக் கூட்டு

Get real time updates directly on you device, subscribe now.

 

தேவையான பொருட்கள் :

ஆவாரம்பூ – ஒரு கப், பயத்தம் பருப்பு – 50கிராம், கடலைப்பருப்பு – 50கிராம், வெங்காயம் – 3 நறுக்கியது, தக்காளி – 2 நறுக்கியது, மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

அரைக்க :

துருவிய தேங்காய் – அரை கப், பச்சை மிளகாய் – 4, சீரகம், தனியா – தலா ஒரு டீஸ்பூன்.

தாளிக்க :

எண்ணெய் – சிறிதளவு, கடுகு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கறிவேப்பிலை – சிறிதளவு.

செய்முறை :

அரைக்கக் கொடுத்துள்ளவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும். பயத்தம் பருப்பு, கடலைப்பருப்புடன் தண்ணீர், மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வேகவைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம், தக்காளியை வதக்கி, அவற்றுடன் ஆவாரம்பூ சேர்த்து மேலும் வதக்கவும். நன்கு வதங்கியவுடன் அரைத்த தேங்காய் விழுதைச் சேர்க்கவும். கலவை நன்கு கொதித்தவுடன் வேகவைத்த பயத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். பின்னர் வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும்.

 

#avarampoo #kootu 

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader