IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி – பிரதமர் அறிவிப்பு

Get real time updates directly on you device, subscribe now.

ஆஸ்திரேலியாவில் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

ஆக்ஸ்போர்டு பல்கலையுடன் இணைந்து கொரோனா தடுப்பூசி மருந்து கண்டுபிடித்துள்ள அஸ்ட்ராஜெனக்கா நிறுவனத்துடன் ஆஸிதிரேலியா அரசு ஓர் ஒப்பந்தம் செய்துள்ளது.

உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனாவிற்கான தடுப்பு மருந்து பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிந்தவுடன், அதனை உள்நாட்டில் தயாரித்து நாட்டிலுள்ள 2.5 கோடி மக்களுக்கும் இலவசமாக போடப்படும் என பிரதமர் ஸ்காட் மோரிசன் பிபிசி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஆஸிதிரேலியாவில் இதுவரை 23,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 493 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 15,246 பேர் கொரோனாவிலிருந்து இதுவரை குணமடைந்தனர். இருப்பினும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 220 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் 12 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

Aromatics and Cosmetics

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader