IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மகாராஷ்டிராவில் தண்டவாளத்தில் படுத்திருந்த தொழிலாளர்கள் மீது ரயில் மோதியது எப்படி? 17 பேர் பலி

Get real time updates directly on you device, subscribe now.

மகாராஷ்டிராவில் தண்டவாளத்தில் தூங்கிக் கொண்டிருந்த வெளிமாநில தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதியதில் 17 பேர் உயிரிழந்தனர்.

சத்தீஸ்கர் மாநிலத்துக்கு நடந்து சென்ற வெளி மாநில தொழிலாளர்கள் தூக்கம் காரணாமாக மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் அவுரங்காபாத்-நாந்தேட் ரயில் பாதையில் தண்டவாளத்தில் தூங்கியுள்ளனர். இந்நிலையில், இன்று காலை 6.30 மணியளவில் அந்த தண்டவாளத்தில் சென்ற காலி சரக்கு ரயில் தூங்கிய கொண்டிருந்தவர்கள் மீது ஏறியதில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உடல் துண்டாகி உயிரிழந்தனர். அனைவரும் ரயில் பாதையின் வழியே மத்திய பிரதேசத்தை நோக்கி நடந்து சென்று கொண்டு இருந்தனர். களைப்பு மிகுதியால் அனைவரும் அந்த ரயில் தண்டவாளத்தில் படுத்து தூங்கியதாக கூறப்படுகிறது. அப்போது அதிகாலை அந்த வழியே வந்த காலி சரக்கு ரயில் அவர்கள் மீது மோதி உள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெளி மாநில தொழிலாளர்கள் சரக்கு ரயிலால் நசுக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் ரயில் விபத்தில் இறந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader