IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ரூ.100க்கு பதில் ரூ.500 வழங்கிய ஏ.டி.எம்.

Get real time updates directly on you device, subscribe now.

ர்நாடகாவில் ஒரு ஏ.டி.எம்.ல் ரூ.100க்கு பதில் ரூ.500 வந்துள்ளது. ஏ.டி.எம்.ஐ. முற்றுகையிட்ட பொதுமக்கள் ரூ.1.7 லட்சத்தை எடுத்துச்சென்றுள்ளனர்.
கர்நாடகா மாநிலம், மடிகேரி என்ற ஊரில் அமைக்கப்பட்டிருந்த கர்நாடகா கனரா வங்கியின் ஏடிஎம்-ல் பணம் எடுக்க சென்ற போது ரூ.100க்கு பதில் ரூ.500 வந்துள்ளது. முதலில் இதை பார்த்த பொதுமக்கள் சற்று குழப்பம் அடைந்துள்ளனர். தொடர்ந்து பணம் எடுத்த போதெல்லாம் இதே போல் வந்ததால், இது பற்றிய தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீ போல பரவியது.
இதையடுத்து பொதுமக்கள் அந்த ஏ.டி.எம்.ஐ முற்றுகையிட்டனர். குறிப்பிட்ட சில மணி நேரத்தில் சுமார் ரூ.1.7 லட்சத்தை பொதுமக்கள் எடுத்து சென்றுள்ளனர்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் பதறியடித்து வந்த வங்கி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஏ.டி.எம்.ஐ. மூடியுள்ளனர். பின்னர் இது பற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் குறிப்பிட்ட ஏடிஎம் வாயிலாக பணத்தைக் கையாளும் ஏஜென்ஸி, ரூ.100 நோட்டுகளுக்கு பதிலாக, ரூ.500 நோட்டுகளை நிரப்பிவிட்டது எனவும், ரூ.500 நோட்டுகளைப் பெற்றுச் சென்றவர்களை வங்கி அடையாளம் கண்டு பணத்தை மீட்டெடுக்க முயன்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader