ஏடிஎம் இயந்திரங்களில் பணம் டெபாசிட் செய்தால் கட்டணம் வசூலிப்பு! வங்கி அதிரடி

Get real time updates directly on you device, subscribe now.

லாக்டவுனுக்கு பிறகு வங்கிகள் பல்வேறு விதிமுறைகள் அமல்படுத்தி வருகின்றனர். வங்கி அலுவல் நேரம் அல்லாத நேரங்களில் வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் பணம் டெபாசிட் செய்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என ஐசிஐசிஐ அறிவித்துள்ளது.

தனியார் வங்கி சேவையில் முன்னணி வகிக்கும் ஐசிஐசிஐ வங்கி இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வங்கியின் அலுவல் நேரம் அல்லாத பிற நேரங்களில், குறிப்பாக வார நாட்களில் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரையிலும், அதேபோல வங்கியின் விடுமுறை தினங்களிலும் ஏடிஎம் இயந்திரங்கள் மூலமாக பணம் டெபாசிட் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் விதிக்கப்படும் என ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் இந்த புதிய நடைமுறை நவம்பர் 1ம் தேதி முதல் அமலாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேப்போல, ஒரு மாதத்திற்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஏடிஎம் இயந்திரங்கள் மற்றும் பணம் டெபாசிட் இயந்திரங்களில் டெபாசிட் செய்தால், அவற்றுக்கும் கட்டணம் விதிக்கப்படும் என்று ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் இந்த புதிய நடைமுறை நவம்பர் 1ம் தேதி முதல் அமலாகிறது

இந்த புதிய நடைமுறை மூத்த குடிமக்களின் வங்கி கணக்கு, அடிப்படை சேமிப்பு கணக்கு, ஜன் தன் வங்கி கணக்கு, மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு இந்த கட்டணம் விதிக்கப்படாது என்றும் ஐசிஐசிஐ வங்கி தெளிவுப்படுத்தி உள்ளது.

#ICICI #deposit amount #in4net

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More