IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ஏழுமலையானை மிஞ்சினார் அத்திவரதர்!

Get real time updates directly on you device, subscribe now.


40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தரிசிக்க முடியும் அத்திவரதர் தரிசனத்தில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் திருப்பதி ஏழுமலையான் கோவிலின் தரிசனத்தை விட காஞ்சிபுரம் அத்திவரதரை அதிகமான பக்தர்கள் தரிசித்து சென்றுள்ளனர்.


தமிழகத்திலேயே இதுவரை கண்டிராத ஆன்மீக வளர்ச்சியை அத்திவரதர் தரிசனம் கண்டுள்ளது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அனந்தபுஷ்கரணியில் இருந்து எழுந்த அத்திவரதர், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியே வந்து ஒரு மண்டலத்திற்கு காட்சியளிப்பார்.


இந்த நூற்றாண்டில் முதல்முறையாக வெளியில் வந்த அத்திவரதர் ஜுலை1ம் தேதி முதல் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அத்திவரதரை இதுவரை 75 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசித்து சென்றுள்ளனர்.


அத்திவரதர் வைபவத்தில் ஆரம்ப நாட்களில் தமிழகத்திலிருந்து மட்டும் ஆயிரம் கணக்கான பக்தர்கள் தான் தரிசித்து சென்றனர். நாளடைவில் தமிழகம் மட்டுமல்லாமல் வடமாநிலத்திலிருந்தும் பக்தர்கள் அதிகமாக வரவே தினம்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து சென்றனர்.


அத்திவரதர் வைபவத்தில் முதல் 37 நாட்களில் மட்டும் சிறப்பு உண்டியல்களில் 4.90 கோடி ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.


தமிழகம் என்பது என்றுமே ஆன்மீக பூமிதான் என்பதற்கு இதுவே சரியான உதாரணம். அத்திவரதரை தரிசிக்க தினம்தோறும் 3 லட்சத்திற்கும் மேல் அதிகமான பக்தர்கள் தரிசித்து செல்கின்றனர். இதனால் வரதராஜ பெருமாள் கோவிலில் தினசரி செய்யவேண்டிய பணிகள் கூட செய்யமுடியவில்லை.


அத்திவரதர் தரிசனத்தால் உலகப்பணக்கார கடவுள் என்றும் அழைக்கப்படும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்தால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் திருப்பதி ஏழுமலையான் கோவில்களில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வரும் நிலையில் தற்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்ததாக ஒரு புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.


அதன்படி ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி முதல் ஆகஸ்ட் 13ம் தேதி வரை இரண்டு கோவில்களுக்கும் வருகை தந்துள்ள பக்தர்களின் எண்ணிக்கை வெளியாகியுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு, ஆகஸ்ட் 9ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 68681 பேர் வருகை தந்துள்ளனர்.


ஆனால் அத்திவரதர் தரிசனத்திற்கு 300000 லட்சம் பேர் தரிசித்து சென்றுள்ளனர். ஆகஸ்ட் 10ம் தேதி திருப்பதிக்கு 90623 பேரும், காஞ்சிபுரம் அத்திவரதருக்கு 310000 பேரும், ஆகஸ்ட் 11ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 100372 பேர், அத்திவரதர் தரிசனத்தில் 300000 பேர் தரிசித்து சென்றுள்ளனர்.


ஆகஸ்ட் 12ம் தேதி திருப்பதி திருமலை தரிசனத்தில் 92291 பேரும், அத்திவரதர் தரிசனத்திற்கு 375000 என நான்கு மடங்கு பக்தர்கள் அதிகமாக சென்று தரிசித்து சென்றுள்ளனர். ஆகஸ்ட் 13ம் தேதி திருப்பதியில் 84025 என்றும், அத்திவரதர் வைபவத்தில் 350000 பக்தர்கள் தரிசித்து சென்றுள்ளனர்.


அத்திவரதர் தரிசனத்தை உலகம் முழுவதும் பக்தர்கள் தரிசிக்க வேண்டும். எனவே அத்திவரதர் தரிசனத்தை 108 நாட்களாக நீட்டிக்க வேண்டும் என்று ஒருபுறம் பக்தர்கள் கோரிக்கை வலுத்துள்ளது. அதனால் பக்தர்கள் அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர். அதற்கான வழக்கை இன்று ஐகோர்டில் விசாரணைக்கு வருகிறது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader