IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

அசுரன் படம் மட்டுமல்ல பாடம் – ஸ்டாலின் வாழ்த்து

37

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படம் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அசுரன் படம் மட்டும் பாடம் என்று தெரிவித்தார்.

பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும், சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன் அசுரன் என ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறன், வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷிற்கும் பாராட்டுகள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அசுரன் பட இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் தனுஷ் ஆகியோரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.