IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

சொந்த ஊர் திரும்பியவரை 14 நாட்கள் மரத்தில் தங்க வைத்த கிராம மக்கள்

Get real time updates directly on you device, subscribe now.

சென்னையிலிருந்து அசாம் திரும்பிய இளைஞரை 14 நாட்கள் மர வீட்டில் தனிமையில் இருக்குமாறு அவரது கிராமத்தினர் உத்தரவிட்டுள்ளனர்.

அசாம் மாநிலம் சோனித்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அமோஷ் பசுமாதரி என்ற இளைஞர் (வயது 21). இவர் சென்னையில் கார் இருக்கை உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அந்த நிறுவனம் மூடப்பட்டது.

இதனால் அந்த தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தவர்கள் வேலை இல்லாததால் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். அந்த வகையில், அமோஷ் பசுமாதரியும் அசாமில் உள்ள தனது சொந்த ஊருக்கு புறப்பட்டு கடந்த மே மாதம் 26-ஆம் தேதி கிராமத்தை அடைந்தார்.

அவர் சென்னையில் இருந்து வந்திருப்பதை அறிந்த கிராம மக்கள் அவரை ஒரு மரவீட்டில் 14 நாட்கள் தனிமையில் தங்கியிருக்குமாறு அறிவுறுத்தினர். அதை ஏற்றுக் கொண்ட அமோஷ் பசுமாதரி தற்போது மரவீட்டில் தனிமையில் இருந்து வருகிறார்.

இதுவரை நான்கு இரவுகளை அந்த மரவீட்டில் அமோஷ் பசுமாதரி கழித்துள்ளார். இன்னும் 10 நாட்கள் அவர் அங்கு தங்கியிருக்க வேண்டும். அந்த மரவீடு சாதாரண வீட்டைப் போல வசதியாக இல்லை என்றாலும், கிராமவாசிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அங்கு 10 நாட்கள் இருக்க உள்ளதாக அவர் கூறினார்.

மர வீட்டில் தங்கியிருக்கும் அமோஷ் பசுமாதரிக்கு கிராம மக்கள் 20 கிலோ அரிசி வழங்கியுள்ளனர். ஆனால் சரியான உணவைத் தயாரிக்க அவருக்கு வேறு எந்த மூலப்பொருளும் கொடுக்கப்படாததால் பெரும் சிரமத்தை சந்தித்து வருவதாக தெரிவித்தார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader