IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

இந்திய மென்பொருள் துறையின் சக்கரவர்த்தி அசிம் பிரேம்ஜியின் வெற்றிக்கதை

Get real time updates directly on you device, subscribe now.

இந்திய மென்பொருள் துறையின் சக்கரவர்த்தி என அறியப்படும், அசிம் பிரேம்ஜி சுமார் நாற்பது ஆண்டுகளாக விப்ரோ நிறுவனத்தினை வழிநடத்தி உலகமென்பொருள் துறையின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக ஆனார்.

கடந்த 2010 ஆம் ஆண்டில் ஆசியா வீக் எனும் இதழ் நடத்திய வாக்கெடுப்பில் உலகில் சக்திவாய்ந்த 20 மனிதர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.

மேலும் 2004 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் டைம் இதழ் நடத்திய வாக்கெடுப்பில் உலகின் சக்தி வாய்ந்த 100 நபர்களில் ஒருவராகத் தேர்வானார்.

பிரேம்ஜி , விப்ரோவின் 73 சதவீத பங்குகளை வைத்துள்ளார். நவம்பர், 2017 அன்றைய நிலவரப்படி 19.5 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்பைக் கொண்ட இவர் இந்தியாவின் செல்வந்தர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இந்தியாவில் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் அசிம் பிரேம்ஜி தொண்டு நிறுவனத்திற்கு 2.2 பில்லியன் வழங்கி தனது வள்ளல் குணத்தை நிரூபித்தார்.

வாழ்க்கை

இவர், 1945 – ஜுலை 24 அப்போதைய பிரிட்டன் இந்தியாவின் குஜராத்திலுள்ள சியா முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர்.

இவரின் தந்தை முகமது ஹசீம் பிரேம்ஜி, பரவலாக அறியப்படுகிற தொழில்முனைவோர் ஆவார். மேலும் இவர் பர்மாவின் அரிசியின் அரசர் என பரவலாக அறியப்பட்டார்.

இந்தியப் பிரிவினைக்கு பிறகு முகம்மது அலி ஜின்னா இவரை பாகிஸ்தான் வருமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் இவர் இந்தியாவிலேயே வாழ்ந்தார்.

சக்தி வாய்ந்த பிசினஸ் மேன்

தன்னுடைய தொலைநோக்கு மற்றும் தலைமைத்துவத்தால் உலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் நிறுவனங்களுள் ஒன்றாக விப்ரோவை உருவாக்கியதற்காக எல்லா காலக் கணிப்பிலும் மிகச்சிறந்த

தொழில்முனைவோர்களுள் ஒருவராக பிசினஸ் வீக் என்னும் இதழ் வெளியீட்டு நிறுவனம் பிரேம்ஜியைப் பட்டம் தந்து பெருமைப்படுத்தியது.

கடந்த 2002 ஆம் ஆண்டில் மணிபால் அகாதமி இவருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கியது.

2006 ஆம் ஆண்டில் மும்பையில் உள்ள தேசிய தொழில்நுட்ப பொறியியல் கல்லூரி இவருக்கு தொழிலில் சிறந்த தொலைநோக்குப் பார்வை கொண்டவர் எனும் விருதினை வழங்கியது.

2009 ஆம் ஆண்டில் தொழில் துறையின் இவரின் சேவையைப் பாராட்டி கனெடிகட்டில் உள்ள வெஸ்லியன் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கியது.

2005 இல் மைசூர் பல்கலைக்கழகம் கௌரவ மருத்துவர் பட்டம் வழங்கியது.

2005 ஆம் ஆண்டில் வணிகத்தில் இவரின் சாதனைகளைப் பாராட்டும் விதமாக இவருக்கு இந்திய அரசு பத்ம பூசண் விருது வழங்கியது.

மேலும் 2011 ஆம் ஆண்டில் இரண்டாவது பெரிய குடியுரிமை விருதான பத்ம விபூசண் விருது வழங்கப்பட்டது.

2013 இல் தி எகனாமிக் டைம்ஸ் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றார்.

2017 இல் இந்தியா டுடே இவரை இந்தியாவின் பலம் பொருந்திய 50 நபர்களுள் 9 ஆவது நபராக அறிவித்தது.

அறக்கட்டளை

கடந்த 2001 ஆம் ஆண்டில் அசிம் பிரேம்ஜி தொண்டு நிறுவனத்தை நிறுவினார். இது ஒரு இலாப நோக்கமற்றது.

மேலும் அனைவருக்கும் தரமான , சமமான கல்வியை கிடைக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள 1.3 பில்லியன் அரசு ஆர்ரம்பப் பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் ஈடுபட்டு வருகிறது. கிராமப் புறங்களில் உள்ள பள்ளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

கடந்த 2001 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் கருநாடகம், உத்தராகண்டம், இராசத்தான், சத்தீசுகர், புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், பீகார் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற இந்தியாவின் பல மாநிலங்களோடு இணைந்து செயல்பட்டு வருகிறது.

மகிழ்ச்சியை தராத பணம்

தான் செல்வந்தனாக இருப்பது தனக்கு ஒருபோதும் மகிழ்ச்சியைத் தந்தது இல்லை எனக் கூறியுள்ளார். மேலும் பெரும் செல்வந்தர்களிடம் உள்ள நிதியின் பெரும்பகுதியினை தொண்டுநிறுவன செயல்பாடுகளுக்கு செலவழிப்பதற்காக வாரன் பபெட் மற்றும் பில் கேட்ஸ் ஆகியோர் இணைந்து தெ கிவிங் பிளட்ஜ் எனும் பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர். அதில் இந்தியா சார்பாக முதலில் கையொப்பமிட்டார்.

ரிச்ச்ர்டு பிரான்சன் மற்றும் டேவிட் செயின்ஸ்பியூரி ஆகியோருக்கு அடுத்தபடியாக மூன்றாவது நபராக தொண்டுநிறுவன சங்கத்தில் இணைந்தார்.

ஏப்ரல், 2013 இல் தன்னுடைய சொத்தில் இருந்து மேலும் 25 சதவீதம் நிதியை தனது தொண்டுநிறுவனத்திற்கு அளித்துள்ளதாக தெரிவித்தார்.

ஜுலை, 2015 இல் விப்ரோவில் உள்ள தனது பங்குகளில் 18 சதவீத பங்கினை எடுத்துக்கொண்டார். தற்போதுவரை 39சதவீத பங்குகளை எடுத்துக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader