IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

போதையில் தள்ளாடிய மாணவர்கள் – நல்லொழுக்கம் கருதி விநோத தண்டனை

15


மதுகுடித்து விட்டு கல்லூரி வகுப்பிற்குள் நுழைந்த மாணவர்களை விருதுநகரில் உள்ள காமராஜர் வீட்டை சுத்தம் செய்யுமாறு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.


விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் 3ம் ஆண்டு படிக்கும் 8 மாணவர்கள் மதுஅருந்தி விட்டு போதையினுள் கல்லூரி வகுப்பிற்குள் நுழைந்தனர். கல்லூரி விதியை மீறியதாக ஒழுங்குநடவடிக்கை குழு அவர்களை ஐந்தாம் பருவத்தேர்வு எழுத அனுமதி மறுத்துள்ளது. மேலும் மாற்றுச்சான்றிதழ் வழங்கப்படும் என அறிவித்தது கல்லூரி நிர்வாகம்.


ஆனால் மாணவர்கள் 8 பேரும் அதே கல்லூரியில் படிப்பை தொடர வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை அளித்தனர். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ் குமார், மாணவர்கள் செய்த தவறை உணர்ந்து நிபந்தனையற்ற வருத்தம் தெரிவித்துள்ளனர். மற்றும் எதிர்காலத்தில் இதுபோல் நடக்கமாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.


எனவே மதுவிலக்கு கொள்கையை வலியுறுத்திய முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த அவரது இல்லத்தை மாணவர்கள் 8 பேரும் சேர்ந்து சுத்தம் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி நேற்று சுதந்திர தினத்தன்று காமராஜர் இல்லத்தை 8 மாணவர்களும் சேர்ந்து சுத்தம் செய்தனர். விருதுநகர் டவுன் போலீசார் கண்காணிப்பில் மாணவர்கள் சுத்தம் செய்தனர்.