IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

விஜய் மல்லையா நாட்டை விட்டு வெளியேற அருண் ஜெட்லி மறைமுக உதவி-ராகுல் காந்தி

Get real time updates directly on you device, subscribe now.

 ராகுல் காந்தி கூறியதாவது: “லண்டன் செல்வதற்கு முன் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை  பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்ததாக விஜய் மல்லையா கூறியுள்ளார். தனது சந்திப்புகள் குறித்து அனைத்தையும் சமூகவலைதளத்தில் எழுதி வரும் அருண் ஜெட்லி, இந்த சந்திப்பு குறித்து எதுவும் கூறவில்லை. மல்லையாவுடன் ஒரு சில சொற்களே பேசியதாக ஜெட்லி சொல்வது பொய்.
தலைமறைவானவருடன் நிதியமைச்சர் பேசியுள்ளார். அவர் லண்டன் செல்ல போவதாக கூறியுள்ளார். இதனை ஏன், அருண் ஜெட்லி, சிபிஐ, அமலாக்கத்துறை, போலீசாரிடம் ஏன் கூறவில்லை. கைது அறிக்கை, தகவல் அறிக்கையாக மாற்றப்பட்டுள்ளது. இதனை சிபிஐ.,யை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் தான் செய்ய முடியும். மல்லையா நாட்டை விட்டு தப்பி செல்ல அருண் ஜெட்லி மறைமுகமாக உதவியுள்ளார்.
அருண் ஜெட்லியை விஜய்மல்லையா சந்தித்ததை காங்கிரஸ் எம்.பி, பி.எல் புனியா பார்த்துள்ளார். 15 முதல் 20 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இருவரும் அமர்ந்து பேசியுள்ளனர். ரபேல் மற்றும் மல்லையா விவகாரத்தில் அரசு பொய் சொல்கிறது. மல்லையா நாட்டை விட்டு வெளியேற நிதியமைச்சர் இலவச பாஸ் வழங்கியுள்ளார்” இவ்வாறு அவர் பேசினார்.
Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader