IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

அருணாப்பேரி மாரியம்மன் கோயில் திருவிழா: ஜன.12ல் தொடக்கம்

Get real time updates directly on you device, subscribe now.

 

அருணாப்பேரி அழகுமுத்து மாரியம்மன் கோயில் திருவிழா வரும் 12ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகேயுள்ள அருணாப்பேரியில் அழகுமுத்து மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் 57ம் ஆண்டு திருவிழா வரும் 12ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறவுள்ளது.

முதல் நாள் அதிகாலை 5-30 மணிக்கு 108 வேத விற்பன்னர்கள் பங்குபெறும் மஹா யாகசாலை பூஜை நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது. ஜன.20ந்தேதி வரை தொடர்ந்து தினமும் காலை, மாலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், மேளம், வில்லிசை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

ஜன.17ந்தேதி மகிழ்வண்ணநாதபுரத்திற்கும், ஜன.18ந்தேதி பெத்தநாடார்பட்டி, பொட்டலூருக்கும், 19ந்தேதி நவநீதகிருஸ்ணபுரம், இலங்காபுரிபட்டணத்திற்கும், 20ந்தேதி நாகல்குளத்திற்கும் அம்மன் சப்பரம் சென்று வரும். 10ம் திருநாளான ஜன.21ந்தேதி 10 செட் வில்லிசை, 3 செட் மேளம், 2 செட் பேண்;ட் வாத்தியம், கணில் ஆட்டம், செண்டாமேளம், இன்னிசை கச்சேரி நடைபெறும். அதிகாலையில் அம்மன் சப்பரம் வீதி உலா வருதல், பூக்குழி இறங்குதல், வானவேடிக்கைகள் நடைபெறும்.
ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா எம்.எஸ்.சிவன்பாண்டி மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

#Arunaperi #Mariamman #Temple #Festival

 

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader