IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

அருணாச்சல பிரதேசத்தில் நடமாடும் பள்ளிகள்

Get real time updates directly on you device, subscribe now.

அருணாச்சல பிரதேசத்தில் பள்ளிகளில் போதுமான இடவசதி இல்லாததால் கைவிடப்பட்ட பழைய பஸ்களில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் நடமாடும் பள்ளியில் படிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் முதல்வர் பெமாகாண்டு தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. லோகித் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மாணவர்கள் பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிட்டது தெரிய வந்தது.

இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் பள்ளிகளில் போதுமான இட வசதி இல்லாமல் இருப்பது தான் முக்கிய காரணம் என தெரிய வந்தது. அதன் பின் கைவிடப்பட்ட பழைய பஸ்களை வாங்கினார்கள்.

அவற்றின் கூரைகளை சரி செய்து அதையே வகுப்பறைகளாக பயன்படுத்த திட்டம் போடப்பட்டது. அதற்கிடையில் பஸ்களின் அமைப்பை மாற்றி வகுப்பறை போன்ற தோற்றத்தை கொண்டு வருவதற்கான வேலைகளும் நடந்துள்ளது.

பஸ்களின் வெளிப்புறத்தில் பள்ளிகளில் இருப்பது போன்று பெயின்ட் அடிக்கப்பட்டு, படங்களும் வரையப்பட்டுள்ளது. தேவையான அளவில் இருக்கை மற்றும் கரும்பலகை போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இதனால் பள்ளிப் படிப்பை பாதியில் கைவிடப்பட்ட மாணவர்களும் திரும்பவும் படிக்க ஆரம்பித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதி மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More