IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

அருண் ஜெட்லியின் மனைவி சங்கீதாவை வைத்து மாஸ்டர் பிளான் போடும் மோடி அமித்ஷா

Get real time updates directly on you device, subscribe now.


மறைந்த முன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லியின் மனைவி சங்கீதா வைத்து மாஸ்டர் பிளான் தீட்டி வருகின்றனர் பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷா.


பாஜக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான அருண் ஜெட்லி சிறுநீரக பிரச்சனை கோளாறு காரணமாக ஒரு மாதத்திற்கு முன்பு உயிரிழந்தார். தற்போது அவர் வகித்துவந்த ராஜ்ய சபா எம்.பி. பதவி காலியாக உள்ளது. அதற்காக அவருடைய இடத்தை நிரப்ப தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்துள்ளது.


பாஜக கட்சி முன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லி கடந்த ஆண்டு ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்றார். ஆனால் பதவியேற்ற நாள்முதல் சீறுநீரக பிரச்சனை கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இவருடைய ஆறு ஆண்டுகால பதவியில் வெறும் ஓராண்டு மட்டுமே தான் பதவி வகித்துள்ளார். தற்போது இந்தப் பதவியை யாருக்கு கொடுக்கலாம் என மோடியும் அமித் ஷாவும் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். மற்றும் இந்த பதவிகுறித்து பா.ஜ.க. புள்ளிகளும் தங்களுக்கு வருமாறு முனுமுனுக்கின்றனர்.


ஆனால் அருண் ஜெட்லியின் எம்.பி. பதவியை அவருடைய மனைவி சங்கீதாவிற்கு அளிக்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் விருப்பம். அமித் ஷாவும் அதை ஏற்றுக் கொண்டார். அருண் ஜெட்லி கட்சிக்கும் அரசுக்கும் அதிகமாக உழைத்துள்ளார். எனவே அவருடைய குடும்பத்திற்கு பாஜக கட்சி ஏதாவது செய்ய வேண்டும் என மூத்த தலைவர்களும் ஆசைப்படுகின்றனர்.


மற்றும் சங்கீதா காஷ்மீர் குடும்பத்தைச் சேர்ந்தவர். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ள நிலையில், காஷ்மீரி பண்டிட் குடும்பத்தை சேர்ந்த சங்கீதா கட்சிக்கு மிகவும் பயன்படுவார். சங்கீதா காஷ்மீர் சென்று, சிறப்பு அந்தஸ்தை நீக்கியதால் காஷ்மீரி பண்டிட் எவ்வாறு பயன்பெறுவார்கள் என்பதை பிரச்சாரம் செய்ய வைக்கலாம் என அமித் ஷா முடிவெடுத்துள்ளார். எனவே அருண் ஜெட்லி மனைவி சங்கீதா விரைவில் ராஜ்யசபா எம்.பி.யாக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
#ArunJaitley #Sangeetha #NarendraModi #AmitShah #In4Net

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader